பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 87 பண்டு, காடும், மலையும், கட்டாந்தரையுமாக இருந்த இந்நிலம், இன்று, நாடாகவும், நகரங்களாகவும், நெல்விலை நன்செய் புன்செய் நிலங்களாகவும், சிறியவும் பெரியவுமாய தொழில் நிலையங்களாகவும் காட்சி அளிக்கிறது. இக் காட்சியை அளிக்க மக்கள் இனம் மேற் கொண்ட போராட் டங்களின் எண்ணிக்கையினைக் கணக்கிட்டுக் காணல் கூடும் கொல்? - ஊரை விட்டு ஒரு காத தூரம் செல்ல, ஒரு மாத காலத்தை வீணாக்கிய மனிதன், இன்று ஒரு சில நாட் களுக்குள் உலகத்தையே வலம் வந்து விடுகிறான்; வானிலே பறக்கிறான்; வான் வெளியையும் கடக்கிறான்; கடலிலே மிதக்கிறான்; நிலத்தில் காற்றினும் கடுகிக் செல்கிறான்: இவ்விரைவும் வசதியும் போராடாமலா கிடைத்தன? ஆழ் கடலடியில் அடங்கியிருந்த முத்து, பவளம்; கண் ணொளி புகாக் காடுகள் செறிந்த மலைப் பிளவுகளில் மண்டிக் கிடந்த மாணிக்கம்: மண்ணுக்கடியில், மண்ணோடு மண்ண்ாகக் கலந்து கிடந்த பொன; இவற்றைக் கொண்ட அழகிய அணி ஆக்கித்தர அம்மனித இனம் ஆற்றிய போராட்டப் பெருமையை அளவிட முடியுமா? நீரோடும், நெருப்போடும், காற்றோடும், மற்ற இயற்கைப் பொருள்களோடும், காட்டில் வாழும் கொடு விலங்குகளோடும் நடத்திய இப்போராட்டங்களில், மக்க வினம் ஒரளவு வெற்றி பெற்று விட்டது. மக்களினம் இயற்கைக் கூறுகளோடு நடத்திய இவை போலும் போராட் டங்களை விரும்பாத நாடு, உலகில், எங்கும், எப்போதும் இருந்ததும் இல்லை. இனியும் இராது, மாறாக, அத்தகைய போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதிலேயே தம் வாழ் வின் வளர்ச்சி அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து, அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/83&oldid=889014" இலிருந்து மீள்விக்கப்பட்டது