பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 91. கல்லூரியில் கால் வைத்த அளவிலேயே அறிவு மாணவனை வந்து அடைந்து விடாது. அதை ஆசிரியர்கள் அளித்தால்தான் மாணவர்களால் அடைய முடியும். ஆசிரியர்கள் தங்கள் வீடுகளிலும், கல்லூரி நூல் நிலையங் களிலும் அடுக்கி வைத்திருக்கும் நூல்களில் மாணவர் தாம் விரும்பும் நூல்களை ஆசிரியரைக் கேளாமலே, அவர் அறியாமலே எடுத்து வந்து விடல்ாம் ஆனால், ஆசிரியர்கள் தங்கள் உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் அறிவுச் செல்வத்தை அவர்கள் கொடுத்தால் அல்லது எந்த மாணவரும் கொள்ள முடியா, ஆகவே, அறிவுச் செல்வத்தை ஆசிரியர்கள் தாமே விரும்பி முன்வந்து அள்ளி அள்ளித்தரும் வகையில் மாணவர்கள் நடந்து கொள்ளுதல் வேண்டும். இந்த மாணவர்கள் நல்லவர்சள், இவர்களுக்கு நாம் பெற்றுள்ள அறிவுச் செல்வத்தையெல்லாம் வாரி வழங்க வேண்டும் என்ற நல்லுணர்வு ஆசிரியர்களுக்கு இயல்பாகவே உண்டாகும் வகையில் நடந்து கொண்டாலல்லது மாணவர் களுக்கு அறிவுச் செல்வம் கிட்டாது. இந்த உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து, "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே' எனக் கற்கும் முறைக்கு இலக்கணம் வகுத்தனர் நம் தமிழ் மூதாதையர். ஆசிரியர்களை நையாண்டி செய்வது, அவர்களை எதிர்த்துப் பேசுவது, அவர்கள் ஆணைக்கு அடிபணிய மறுப்பது போலும் செயல்களால், ஆசிரியர்களின் வெறுப் பினைத் தேடிக் கொள்ளும் மாணவன், அம்முழு அறிவையும் பெறத் தவறியவனாவன். பெருஞ்செல்வர் வீடுகளைத் தேடி அடைந்து, அவர்முன் கைகட்டி, வாய் புதைத்து நின்று தன் வறுமைக் கொடுமையை விளங்கக் கூறிக் கையேந்திக் காசு பெறும் வறியவர் போல் ஆசிரியர்களிடம் பணிவோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/87&oldid=889022" இலிருந்து மீள்விக்கப்பட்டது