பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வஞ்சி முதுரர் கல்லூரிக்குச் செல்லட்டும்; பட்டம் பெறட்டும்; பெரிய பதவியில் அமரட்டும் அதன் பயனாய் நம் குடும்பத்தில் வழி வழியாகத் தொடர்ந்து வரும் வறுமை தொலையட்டும்: எதிர்காலத்தில் வர இருக்கும் அந்த நல்ல காலத்தை அடை வதற்காக இப்போது நாம் அடையும் இடர்ப்பாட்டினைத் தாங்கிக் கொள்ளுவோம்” என்ற உணர்வோடுதான் தம் பிள்ளையைக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கின்றனர். தம் உடலுரத்திற்கும் மேற்பட உழைத்துத் தங்கள் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி தம் பிள்ளை கேட்டதை எல்லாம் அளித்து வருகின்றனர். அப்பெற்றோர்களின் கனவு நனவாவது பிள்ளையின் கையில்தான் உள்ளது. "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே' என்ற முதுமொழிக்கேற்ப, தம் பிள்ளையைச் சான்றோன் ஆக்க பெற்றோர் தங்கள் கடனை முழுமையாக ஆற்றுகின்றனர். தம் பெற்றோர் ஆற்றிய அம்பெருந்தியாகத்திற்கு பிள்ளை ஆற்ற வேண்டிய நன்றிக்கடன் அவர்கள் விரும்பியவாறு, கற்பன கற்று தேர்வது ஒன்றே. - கல்லூரியில் பயிலும் காலத்தில் காலையில் கண்விழித் தெழுந்ததும், ஒரு சிறிது நேரம் இரு கண்களையும் மூடிக் கொண்டு, தன்னைக் கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, கல்லூரி யில் தனக்குக் குறையேதும் நேராவண்ணம் காலந்தவறாமல் தான் கேட்பதையெல்வாம் கொடுப்பதற்காகத் தன் குடும்பத்தினர் மேற்கொண்டிருக்கும் கடினமான உழைப்பு, அவ்வாறு கடினமாக உழைப்பதற்குக் காரணமான அவர்கள் ஆசைக்கனவு, அக்கனவு நினைவாக்க வேண்டிய தன் கடமை ஆகியவைகளைச் சிறிது நேரம் தன் உளத்திரையில் ஒட விட்டுச் சிந்திப்பதை வழக்கமாக தாள்தோறும், ஒவ்வொரு மாணவனும் கொண்டு விடுவனாயின், மாணவர் உள்ளத்தில் கல்வியைத் தவிர்த்து வேறு எவ்விதக் கிளர்ச்சி உணர்வும் தலை தூக்காது. அத்தகைய சிந்தனை மாணவர்களின் இன்றியமையாக் காலைச் கடன்களில் ஒன்றாக அமைய வேண்டும். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/86&oldid=889020" இலிருந்து மீள்விக்கப்பட்டது