பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. அறிவுச் செல்வம் - மாணவப் பருவம் ஒருவன் எதிர்காலத்தில் வளத் தோடும் வளமார் புகழோடும்வாழ்வதற்கு உறுதுணை புரியும் ஒரே கருவியாம் கல்வியைப் பெறவேண்டிய பருவம் இந்த மாணவப் பருவந்தான். இந்தந் பருவத்தில் தான் கல்வியை, முழுமையாகப் பெறமுடியும். இப்பருவத்தில் அதைப் பெறத் தவறிவிட்டால் பிற்கால வாழ்க்கையில் எவ்வளவு முயன்றாலும் அதைப் பெற முடியாது. வாழ்நாட் பருவத்தில் மிகச் சிறப்புடைதான இம் மாணவப் பருவம் மனித உள்ளம் துாண்டிவிடப்படும் , உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டுப் போகும் இயல்புடையது தான். அவ்வாறு உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டுக் கிளர்ந் தெழும் உள்ளத்தை ஒரு நெறிப்படுத்துவது அரிதினும் அரிது தான்ஆயினும் அத்தகையசூழ்நிலையினும் உள்ளத்தை, அது ஒடத் துடிக்கும் இடத்திற்கு ஓடி விட இடந்தந்து விடாது எதிர்கால வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் உணர்வு களுக்கு அடிமைப்படுத்தி விடாது ஆக்கம் தரும் உணர்வில் தடுத்து நிறுத்துதல் வேண்டும். அதுதான் அறிவுக்கு அழகு: கல்வி கற்பதன் பயன். - . . . . - சென்ற இடத்தால் செலவிடாது, இது ஒரீஇ ந்ன்றின்பால் உய்ப்பது அறிவு” r< உழைத்துப் பிழைக்கும் எளிய குடும்பத்தினரான பெற்றோர், 'நம் குடும்பத்தில் இவன் ஒருவனாவது வஞ்-6 х -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/85&oldid=889018" இலிருந்து மீள்விக்கப்பட்டது