பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 93 வேற்றுமொழி வழங்கும் நாடுகளின் வளர்ந்து கரும் அறிவுச் செல்வங்களை நம்முடைய:ைசக ஆக்கிக் கொள்ள வும், நம்நாட்டு ஆக்கங்களை அவ்வேற்று நாட்டவரோடு பகிர்ந்து கொள்ளவும், மாணவர்கள் அறிவியல் துறை, மொழித்துறை ஆகிய இரு துறைகளிலும் ஒரு சேர, சிறந்த அறிவினைப் பெற்றவர்களாகத் திகழ்தல் வேண்டும். "அறிவுடையார் எல்லாம் உடையார்' என்ற உண்மை உணர்ந்து சிறந்த அறிவுடையராதல் இன்றியமையாது வேண்டப்படுவதொன்றாகும். ஆனால், அவ்வறிவு கட்டுமே ஒருவனை உயர்ந்தவனாக ஆக்கிவிடாது. அவனை முழு மக்கட்டன்மை உடையவனாக உயர்த்த அறிவோடு வேறு ஒன்றுக் தேவைப்படுகிறது. அதுதான் நாகரிகம், பண்பாடு" மிக உயர்ந்த மாடமாளிகைகளில் வாழ்வது, விலை உயர்ந்த ஆடை அணிகளை அணிந்து கொள்வது, விரைந்த வாகனங்களில் உலாவருவது, எண்ணற்ற எடுபிடி ஆட்களைக் கொண்டிருப்பது ஒவ்வொருவருக்கும் தேவைதாம் என்றா லும் இவை மட்டுமே நாகரிகமாகிவிடாது. இவையெல்லாம் அறிவும் உழைப்பும் துணைநிற்க நம் முயற்சியின் பயனாய் வந்துற்றவை. தம்மோடு ஒன்று கூடி வாழும் பிற உயிர் களுக்கு இன்னல் நேரக் கண்ட அளவே, அவ்விண்ணலைத் தமக்கு வந்ததாகக் கொண்டு உளம் துடிக்தும் உயர்ந்த உணர்வு உடையராதல் வேண்டும். அவ்வுணர்வுடைமை ஒன்றுதான் நாகரிகம் என்ற சொல்லால் உணர்த்தப்படும். தகுதியுடையதாகும். - "நெடியமொழிதலும்,க டிய ஊர்தலும் செல்வம் அன்று: தன் செய்வினைப் பயனே சான்றோர் செல்வம் என்பது சேர்த்தோர் புன்கண் அஞ்சும் பண்பின், . . மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே" என்ற நற்றிணையின் நல்லுறை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/89&oldid=889026" இலிருந்து மீள்விக்கப்பட்டது