பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. வஞ்சி மூதூர் பிறர் துயரை தம் துயராகக் கொள்ளும் பண்பாளர்கள் வாழ்ந்தால்தான் நாடு வாழும். "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்" என்றார் வள்ளுவர். "தமக்கு என முயலா நோன்தாள் பிறர்க்கு என - முயலுநர் உண்மையான் உண்டால் அம்ம இவ்வுலகம்’ என்றார். புறநானூற்றுப் புலவர். அத்தகைய பண்பாட்டினைப் பெறாமல் அறிவுச் செல்வத்தை மட்டும் அளவிறந்து பெறுவது விரும்பத்தக்க தன்று. பண்பாடு கலவாத அறிவு பயன் அற்றது. "அரம் போலும் கூர்மைய ரேனும் மரம் போல்வர் மக்கட் பண் பில்லாதவர்' "அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக்கடை’’ என்ற வள்ளுவர் அறிவுரைகளை உளம் கொள்வோமாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/90&oldid=889032" இலிருந்து மீள்விக்கப்பட்டது