பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi

சேவித்தோம். இதற்கு முன்னரே சிங்கவே.ழ் குன்றத்தைச் சேவித்து விட்டேன். 1974-டிசம்பரில் குருட்சேத்திரா வில் (ஹரியானா) நடைபெற்ற கீழ்த்திசை மாநாட்டின் போது நானும் என் ஆராய்ச்சி மாணாக்கர் திரு. ந. கடிக சலமும், அரிய நண்பர் பண்டித வி. நடேசனாரும் வட மதுரை, பிருந்தாவனம் இவை இரண்டைமட்டிலுமே சேவித்தோம். திருப்பதியில் பணியாற்றிய காலமாதலால் ஏழுமலையான் திருவடிவாரத்திலிருந்தே பயணங்கள் தொடங்கின. திருவேங்கடம், சிங்கவே.ழ் குன்றம், வட மதுரை, பிருந்தாவனம் இந்த நான்கைத் தவிர ஏனைய வற்றைமானசீகமாகவே சேவித்துப்பேரின்பம் பெற்றேன். ஆயர் பாடி, கோவர்த்தனம் என்ற இரு இடங்கள் பற்றிய தகவல்களை என் அரிய நண்பர்-வடமதுரையைச் சார்ந் தவர்- சி. பி. ராவத் (ரீடர், இந்தித்துறை, திரு வேங்கடவன் பல்கலைக் கழகம், திருப்பதி) அன்புடன் உதவினார். அவருடன் உரையாடினபோது என்னை மறந்து மானசீகமாகவே திவ்விய தேசங்களில் நடையாடி

னேன்.

இந்தத் திவ்விய தேசப் பயணங்களில் (நேரிலும் மான சீகமாகவும் சென்றவைகளில்) யான் பெற்ற அநுபவம் 14 கட்டுரைகள் கொண்ட வடநாட்டுத் திருப்பதிகள்’ என்ற பெயருடன் நூல் வடிவம் பெறுகின்றது. இவற்றுள் முதல் கட்டுரை நெடியோன் குன்றத்து நீல முகில்’ என்ற தலைப்பில் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் குடமுழுக்கு விழா மலரில் (1976) வெளி வந்தது; அஃது ஈண்டு சிறிது மாற்றத்துடன் வேங்கடம் மேவிய விளக்காக இடம் பெற்றுள்ளது. இரண்டாவது கட்டுரை சிங்கவேழ் குன்றுடை ஈசன் அரசு இதழாகிய திருக்கோயில் (1979 டிசம்பர் இதழ்) வெளிவந்தது. ஏனையவை நேராகவே நூலில் இடம் பெறுகின்றன. ஏற்கனவே, தீவ்விய தேசத் திருப்பயணத்தைப் பற்றி மலை நாட்டுத் திருப்பதிகள் (1971), தொண்டை நாட்டுத் திருப்பதிகள்’ (1973)