பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 36 வடநாட்டுத் திருப்பதிகள்

கண்ணனைப் பிருந்தாவனத்தில் கண்டதாக அமைந்த பாசுரங்கள் ஆண்டாளுக்கு அவன் சேவை தந்தருளின படியைக் கூறுவன. அச்சேவையை நேராகப் பேசாமல் ‘கண்ணபிரானைக் கண்டதுண்டோ?’ என்று கேட்பாரும் ‘ஓ, நன்றாகக் கண்டதுண்டு’ என்று விடையளிப்பாரு மாகப் பாசுரங்களை அமைத்துக் கண்ணன் அநுபவத்தில் ஈடுபடுகின்றாள் ஆண்டாள்.

‘பட்டி மேய்ந்தோர் காரேறு

பலதே வர்க்கோர் கீழ்க்கன்றாய் இட்டி றிட்டு விளையாடி

இங்கே போதக் கண்டிரே? இட்ட மான பசுக்களை

இனிது மறித்து ரூேட்டி விட்டுக் கொண்டு விளையாட

விருந்தா வனத்தே கண்டோமே.”*

(பட்டிமேய்தல்-காவலில்லாமல் திரிதல்; கார் ஏறுகறுத்த காளை இட்டீறிட்டு-பலவிதமான கோலா கலங்களைப் பண்ணி.) என்பது பாசுரம், ஒன்பது பாசுரங்கள் இப்பாணியில் செல்லுகின்றன. கண்ணன்மீது தான் கொண்டுள்ள காதலுணர்ச்சியை உடனே கவனிக்காததனால், ஆண்டாள் அவனுக்குப் பட்டி மேய்ந்த காரேறு (1), குட்டேறு (2), மாலே செய்யும் மணாளன், ஏலப்பொய்கள் உரைப்பான் (3), வலையில் பிழைத்த பன்றி (5), தருமம் அறியாக் குறும்பன் (6), புறம்போல் உள்ளும் கரியான் (7) என்று அவனை ஏசி அநுபவிக்கின்றார் அன்னையார். கண்ணனை அடையக் காமனையும் சாமனையும் வேண்டிப் பட்டபாடெல்லாம் தீரக் கண்ணன் அன்னை யாருக்குக் காட்சி அளித்த இடம் பிருந்தாவனமேயாகும்.