பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



1

. வண் துவராபதி மன்னன்

திவாரகையை நினைக்கும்போதே குசேலரின் வரலாறும் நம் நினைவுக்கு வருகின்றது. சிறந்த பக்தரான குசேலர் தம் மனைவியின் துரண்டுதலால் கண்ணனை நோக்கி வருகின்றார். இவர்தம் வருகையைக் காவலரால் அறிந்த கண்ணன் தானே அரியணையிலிருந்து இறங்கி வந்து, ‘திலகமண் தோய கண்ணன் திருவடி தொழு திட்டானே’ என்றவாறு குசேலரின் திருவடிகளில் வணங்குகின்றான். பின்பு தன்னுடன் அவரை அழைத்துச் சென்று அவர்தம் திருவடிகளைத் தன் மடிமீது வைத்து ‘இத் திருவடிகள் வெகுதூரம் நடந்து நொந்தனவே!’ என்று பகர்ந்து கொண்டே அவற்றை மெல்லெனப் பிடிக் கின்றான். குசேலர் கண்ணன் செய்யும் உபகாரங்களுக்கு எல்லாம் தம் பாரதந்திரியத்திற்கு (பகவானுக்கு வசப்பட் டிருத்தல்) ஏற்ப இசைந்திருக்கின்றார்.

‘வழிகடந் திளைத்த வேஇம் மலரடி இரண்டும் என்று கழிமகிழ் சிறப்ப மெல்ல

வருடினான் கமலக் கண்ணன்; பழியில்பல் உபசா ரங்கள்

பண்ணவும் தெரியா னாகி ஒழிவது தவக்கு சேலன்

ஒன்றும்பே சாதி ருந்தான்.’

1. 2. டிை-410