பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயர்பாடி அணிவிளக்கு 4

‘நாமம்’ என்றது. இதற்கு ஒர் அதிகாரி நியமம், அங்க நியமம் வேண்டா, குழந்தை தாய் பேரைச் சொல்லுமாப் போலே சொல்ல அமையும் என்கைக்காக, “அம்மே.” என்கைக்கு எல்லாரும் அதிகாரிகளன்றோ? இடறி விழும் நிலையிலுள்ளவன் அம்மே என்று சொல்வதைப் போலவே இதுவும். இவ்விடத்தில் ஒரு வரலாறு: ‘நஞ்சீயர் பராசர பட்டரை நோக்கி, திருநாமம் சொல்லும்போது பக்தியுடையனாய்க் கொண்டு சொல்ல வேணுமோ?’ என்று கேட்க, அதற்கு அவர் கங்கையிலே முழுகப் போனவனுக்கு வேறு ஒர் உவர்க் குழியிலே முழுகிப் போக வேணுமோ?’ என்று அருளிச் செய்தாராம். திருநாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது; அவர்களே அதிகாரிகள்.’ -

கனத்த பேற்றுக்கு இவ்வளவு போதுமோ? என்று சிலர் ஐயுறக் கூடும் என்று நினைத்துத் திண்ணம் என் கின்றார். ‘நாராயண’ என்றுகூடச் சொல்லாமல், “நாரணமே என்ற ஏகாரத்தாலே பிரணவம், நமஸ்கை, சதுர்த்தி (நான்காம் வேற்றுமை) ஒழியவும் இத்துணையே போதும் என்கின்றார். இவ்விடத்தில், நம் பிள்ளை ஈடு; ‘காரணம் என்று இல்லாத மகாரத்தைக் கூட்டி உள்ள வற்றைக் குறைத்துச்சொல்லுகையாலே, அளத்தில் பட்ட தெல்லாம் உப்பாமாப்போல இத்தோடி கூடினதெல்லாம் உத்தேசியம் என்றும், குறைந்தாலும் அங்கம் தப்பிற்று, ஸ்வரம் தப்பிற்று’ என்று ப்ரஹ்ம ராச்சஸ்ஸாகப் போக வேண்டு மவற்றைக் காட்டில் இதுக்குண்டான வாசி (பெருமை) சொல்லுகிறதாயிற்று.’

இந்த எண்ணங்கள் நம் சிந்தனையில் குமிழியிட்ட வண்ணம் திருவாய்ப்பாடி போகச் சித்தமாகின்றோம். திருவாய்ப்பர்டி கண்ணன் நந்தகோபன் வீட்டில் வள்ர்ந்த

6. திருவி- 2 : 5 இன் ஈடு காண்க. - 7. இவ்விடத்தில் நம்படுவான் சரிதத்தை நினைவு கூர்க.