பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 வடநாட்டுத் திருப்பதிகள்

அழகுக் கூறுகளில் மனத்தைப் பறிகொடுக்கின்றனர். இத்தகைய மனநிலையைக் கொண்ட ஆழ்வார்களும் இயற்கை அழகினைத் தம் உள்ளத்து அழகுடன் குழைத்து தன் மனம் விரும்பும் கடவுள் வடிவத்தின் தெய்விக அழகாகக் காண்கின்றனர். இத்தகைய இயற்கை அழகு வாய்ந்த தலங்கள்தாம் திவ்விய தலங்கள்’ என்றும் ‘திருப்பதிகள்’ என்றும் மதித்து அங்குள்ள திருக்கோயில் களில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமான்களை வழி படுவது முக்கியம் என்று கருதினர் பக்தர்கள். இத்தகைய தலங்களில் ‘திருப்பதி’ என வழங்கப்பெறும் திருவேங்கட மலை ஆழ்வார்கள் காலத்தில் சிறந்த தலமாக இருந்திருத் தல் வேண்டும்.

பூதத்தாள் காட்டும் காட்சி ஒன்றினைக் காண்போம். திருமலையில் மதப்பெருக்கால் செருக்கித் திரியும் ஆண் யானை ஒன்று. அது தன் காதலியாகிய பெண் யானை யைக் காண்கின்றது. அதனைக் கடந்து அப்பால் செல்ல மாட்டாது அதற்கு இனிய உணவு ஈந்து அதன் மனம் நிறைவிக்க விரும்புகின்றது. அம்மலையிலுள்ள மூங்கிற். குருத்தொன்றினைப் பிடுங்குகின்றது. அதனை அருகி லுள்ள மலை முழைஞ்சிலிருந்த ஒரு தேனடையில் தோய்த்து அப்பிடியின் வாயில் ஊட்டுகின்றது ‘குளோப் ஜாமுனை ஊட்டுவது போல. இதனை ஆழ்வார்,

‘பெருகு மதவேழம்

மாப்பிடிக்கு முன்நின்று

இருகண் இளமூங்கில்

வாங்கி-அங்கிருந்த

தேன்கலந்து கீட்டும்

திருவேங் கடம்கண்டில்

வான்கலந்த வண்ணன்

13 * “ .

13. இரண் திருவத்-75