பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வட்நாட்டுத் திருப்பதிகள்

டவர், இராமனாக நின்று மராமரங்கள் ஏழினையும் ஒரம்பினால் எய்து அற்புதச் செயலைப் புரிந்தவர்.” பாலனாய் ஏழுலகுண்டு ஆலிலையில் துயின்றவர்; திண்திறல் அரியாகி ஒண்திறல் அவுணன் உயிர் குடித்த திறலுடையவர். பஞ்ச பூதங்களின் வடிவமாக நின்று பேராயிரம் பெயர்கள் கொண்ட பெம்மான்.”

இன்னும், எம்பெருமான் இராவணனின் திண் ஆகம். பிளக்க அம்பு கோத்தது, இலங்கை அரக்கர்களை மடியச் செய்தது, நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு ஆலிள ந், தளிர்மேல் துயில் கொண்டது.உரிமேல் நறுநெய்யை அமுது செய்தது, குறளுருவாய் நின்று ஈரடிகளால் நிலமனைத்தை யும் கவர்ந்தது, அரியாய்த் தோன்றி அவுணன் உடல் பளந்தது முதலிய செயல்களில் ஆழங்கால்பட்ட வண்ணம் பல வேண்டுகோள்களை விடுக்கின்றார். ‘அடியேனுக்கு அருளாயே’ என்றும். ‘அடியேனுக்கு அருள் புரியாயே’ என்றும், குறிக்கொள் எனைநீயே” என்றும் பிரார்த்திக்கின்றார். அடுத்து. திருவேங்கட முடையான் அவருடைய திருவுள்ளத்தில் வந்து புகுந்த பெருஞ். செயலைப் பேசி அநுபவிக்கின்றார்.” திருவேங்கடம் மேய என் ஆனை என் நெஞ்சில் உள்ளானே’ என்றும், ‘திருவேங்கடமாமலை மேய கோனே! என்மனம் குடி கொண்டு இருந்தாயே என்றும் பேசி இனியராகின்றமை, யையும் காண்கின்றோம்.

எம்பெருமான் திறத்தை எடுத்துரைத்த ஆழ்வார் தம். குற்றங்களையெல்லாம் விரித்துக்கூறித் தம்மை ஆட்கொள் ளுமாறு வேண்டிச் சரண் புகுகின்றார். எம்பெருமானே, உறவினரல்லாதாரை உறவினர்கள் என்று நம்பிக் கெட்டொழிந்தேன்.” அநுபவிக்கத் தகாதவற்றை அது

29. பெரி. திரு-1. 8: 5 32. பெரி. திரு-1. 10:1 to 5 30. . 1. 8:6 33. டிை 1. 10:6,7 31. : 1. 8:7 84. . 1. 9: 8