பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சிங்கவேழ் குன்றுடை ஈசன்

வைணவ சமயத்தின் கொடுமுடியாகத் திகழ்வது சரணாகதி தத்துவம். இதனைப் பிரபத்தி எனவும் வழங்கு வர். பிரபத்தியாவது பகவானை உபாயமாகப் பற்றுதல்.

‘சரணம் ஆகும்தன தாள்.அடைக்

தார்க்கு எலாம்

மரணம் ஆனால்வை குந்தம் கொடுக்கும் பிரான்.”

என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இறைவனிடம் சரண் புகுந்துவிட்டாலும், இருப்பூர்தி நிலையத்தில் வண்டி வரும் வரையில் காத்திருக்குமாப்போலே, மரணம் ஏற்படும் வரையில் (அதாவது, பிராரப்த கர்மம் முடியும் வரை) காத்திருக்க வேண்டியதுதான். பிராரப்தகர்மத்தை அநுபவித்தே கழிக்க வேண்டும். இறைவன் சஞ்சித கர்மத்தை தீயினில் தாசாகும்படி செய்து விடுகின்றான் என்பது இத்திருவாய் மொழியின் கருத்தாகும்.

சாதி வேற்றுமை கருதாது எல்லோரும் எளிதாகப் பின்பற்றக் கூடிய வழி இப் பிரபத்தி.

“பிரபத்திக்குத் தேசநியமமும், பிரகார நியமமும், அதிகாரி நியமமும் பல நியமமும் இல்லை.”

1. திருவாய் 9, 10 : 5 , 2. ஸ்ரீவச. பூஷ - 24 (புருடோத்த நாயுடு பதிப்பு)