பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நைமிசாரணியத்து எந்தை 53

சொல்வது முண்டு. ஒன்று: எம்பெருமான் கூட இல் விருள் தருமா ஞாலத்தில் திருவவதரித்ததால் சோகம் மோகம் முதலானவை அப்பெருமானுக்கும் தோன்றுவ தாகச் சாத்திரங்கள் பேசும். அதுபோல ஆழ்வார்கட்கும் இப் பிரகிருதி வாசனையின் கொடுமையினால் சில குற்றங்கள் சம்பவிப்பதுண்டு. சிறிய குற்றங்களையும் அவர்கள் தம்மைத் தாழ்த்திப் பேசும் பாங்கில் பெரியன. வாகப் பேசுகிறார்கள். இஃது ஒரு சமாதானம். இரண்டு. பகவத் சந்நிதியில் தம்முடைய குற்றங்களைச் சொல்லிக்கொள்ள வேண்டியது அவசியம் என்கிற சாத்திர மரியாதையைக் காட்டுவதற்காகவே பூருவர் தோஷாதுசந்தானம் செய்து கொண்டனர் என்பது மற்றொரு சமாதானம். உண்மையில் மகான்களிடம் குற்றங்கள் இருந்தனவா? அன்றா? என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவை இல்லை. குற்றமே வடிவெடுத்த நமக்கு அது சந்திப்பதற்குப் பாங்கான பாசுரங்களை அருளிச் செய்தனர் என்று கொள்வதே பொருந்தும். மேலும் நம்போலோரின் சார்பாக அவர் இறைவனிடம் முறையிடு கின்றார் என்றும் கொள்ளலாம்.

இங்ஙனம் நம் சிந்தனை ஒடிக்கொண்டிருக்கும் பொழுது திவ்விய கவியின் பாசுரம் நினைவுக்கு வரு கின்றது.

‘ஓரறிவும் இல்லாத

என்போல்வார்க்கு உய்யலாம் பேரறிவு உண்டேனும்

பிறர்க்குஅரிது-பார்அறிய கைம்மிசாரண்யத்து

நாதர்அடி யாரோடும் இம்மிசார் வுண்டா யினால் ே

6. நூற். திருப். அந்-99.