பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 வடநாட்டுத்திருப்பதிகள்

மொட்டுகளின்மேல் விழ, அவை மலர்ச்சிபெறும்(9); தாரா என்ற பறவைக் கூட்டங்கள் வயல்களில் காணப் பெறும் (4).

இத்தலத்து எம்பெருமானைக் கூறுங்கால,

‘உலவு திரையும் குலவரையும்

ஊழிமுதலா எண்திக்கும் நிலவும் சுடரும் இருளும்ஆய்

நின்றான்; வென்றி.விறலாழி வலவன்.’ (திரை-அலைகள் (கடல்); வரை-மலை, ஊழி-காலம்; சுடர்-சூரியன், சந்திரன், ஆழி-சக்கரம்; வலவன்வலத் திருக்கையில் உடையவன்)

என்கின்றார் திருமங்கை மன்னன். உலவுகின்ற அலை களையுடைய கடலும், காலம் முதலான சகல தத்துவங்: களும், எட்டுத் திசைகளும் சூரியனும், சந்திரனும், இருளும் ஆகிய இப்பொருள்கட்கெல்லாம் அந்தர்யா மியிாய் இருப்பவன்; வெற்றியையும், மிடுக்கையும். உடைய திருவாழியை வலக்கையிலே கொண்டவன், மேலும் இவனை,

‘இருசுடராய் வானாய் தீயாய் மாருதமாய்

மைையாய் அலைநீர் உலகனைத்தும் தானாய் தானும் ஆனான்.'” (இருசுடர்-சூரிய சந்திரர்கள்; வான்-ஆகாயம்; மாரு

தம்-காற்று; அலை நீர்-கடல் நீர்) என்றும் காட்டுவர். சந்திர சூரியர்களாயும், ஆகாய மாயும், தீயாயும், காற்றாயும், மலைகளாயும், கடல்,

7. பெரி. திரு. 1.5:3 8. . 1.5:T