பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதரிநாதன்-தரநாராயணன் 7 I

பெறுவார். திருத்தலப் பயணிகளில் வேண்டுவோருக்கு இவர் இறைவனின் திருமுகம், திருமேனி முதலியவற்றை விளக்குவார்.

திருக்கோயிலின் பிராகாரத்திற்குள்ளேயே இலக்குமி தேவி, ஆதிசங்கரர் இவர்கட்குத் தனித்தனி சிறுகோயில்கள் உள்ளன. திருக்கோயிலின் இடப் புறத்தில் என்றும் பஜனைக் குழாம்கள் இருந்துகொண்டே இருக்கும். உருத்திர வீணைக் கலைஞர் ஒருவர் தலைமையில் சதா இசை விருந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இப்பெரிய கோயிலின் பின் புறத்தில் இலக்குமி நரசிம்ம ருக்கு ஒரு தனிக்கோயில் உள்ளது. இங்கு வேதாந்த தேசிகர், இராமாநுசர் இவர்களுடைய திருமேனிகள் நிறுவப் பெற்றுள்ளன. திருக்கோயிவின் அருகில் பிரம்ம கபாலம்’ என்ற திருநாமத்துடன் ஒரு பெரும் பாறை உள்ளது. இங்குத் திருத்தலப் பயணிகள் தம் முன்னோர் கட்குப் பிண்டம் சமர்ப்பித்துத் தர்ப்பணம் செய்வர்.

இத்திருக்கோயில் உள்ள இடத்தை விசாலபுரி என வழங்குவர். எல்லாப் பக்கங்களிலும் திருக்கோயில் பணி வரைகளால் சூழப்பெற்றுள்ளது; திருக்கோயிலின் முன் புறமிருப்பது நர-நாராயண மலையாகும்; வலப்புறம் இருப்பது நீலகண்ட மலையாகும். வழியில் திருத்தலப் பயணிகள் ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது “போலோ பதரி விசால் கி ஜை, போலோ பதரிநாராய -ணன் கி ஜை’ என்று குரல் எழுப்பி வரவேற்றுப் புகழ் பாடி மகிழ்வர்.

வதரி நாராயணனைப் பெரியாழ்வார், ‘வடதிசை மதுரை சாளக்கிராமம்

வைகுக்தம் துவரை அயோத்தி இடம்உடை, வதரி இடவகைஉடைய

எம்புரு டோத்தமன் இருக்கை’’’

2. பெரியாழ் திரு. 4. 7; 9.