பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வடநாட்டுத் திருப்பதிகள்

என்று கண்டம் திருப்பதி எம்பெருமானை மங்களா சாசனம் செய்யுங்கால் குறிப்பிடுவர். திருமங்கையாழ்வார் சிறிய திருமடலில்,

“பாரோர் புகழும் வதரி’’’

என்று குறிப்பிடுவதுடன் திருவதரித் திருமலையைத் திரு. வுள்ளம் பற்றி ஒரு திருமொழியாலும் வதரி நாராயணன்

தவம் புரிந்த இடமாயும் தானே சீடனாயும் ஆசாரியனா

யும் நின்று திருமந்திரத்தை வெளியிட்டருளின இடமாயும் உள்ள வதரிகாசீர்ம சிறப்பைத் திருவுள்ளம் பற்றி ஒரு திரு. மொழியாலும் மங்களாசாசனம் செய்கின்றார்.

நர-நாராயணன் உகந்தருளின இடம் வதரித் திரு. மலை. அதுவும் ஆழ்வாருக்கு உகப்பாகின்றது. ‘திரு வேங்கட மாமலை, ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே.”* என்று கூறிய நம்மாழ்வாரைப் பின்பற்றி இவரும் மலை யையே சேவிக்கின்றார். பாசுரந்தோறும் ‘வதரி வணங் குதுமே வதரி வணங்கிதுமே” என்று குறிப்பிடுகின்றார். வதரி இருக்கும் இமயமலைப் பகுதியோ ‘கண்டியூர் அரங் கம் மெய்யம் கச்சிபேர் மல்லை’ என்னும் திருப்பதிகள் போலன்றி மிகச் சிரமத்துடன் அடையக்கூடிய இட்மாத லால் உடல் பாங்காக இருக்கும்பொழுதே சென்று சேவிக்க வேண்டுமென்று ஆற்றுப்படுத்துகின்றார். வதரியை “மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி”, “ஆயிரம் நாமம் சொல்லி, வெளி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி’, ‘வாளைப்ாயும் தண்தடம் சூழ் வதரி’, என்று மலையின் இயற்கைக் காட்சியில் மனத்தைப் பறி கொடுக்கின்றார். ‘வண்டு பாடும் தண்துழாயான் வதரி’

3. சிறிய திருமடல்-கண்ணி 47 7. திருக்குறுந்-19 4. பெரி திரு 1.3 8. பெரி. திரு. 1.3:2 5. பெரி. திரு. 1.4 9. . 1. . 8 : 8 6. திருவாய். 3.3:8, 1.0. . 1. . 8 : 4 13. டிை 1 . 3 : 5