36 பென் பெல்லா, தலைமையில் ஒரு கோடி அல்ஜீரிய முஸ்லீம்கள் திரண் டனர். 20,000 பேர் கொண்ட கொரில்லாப் படையை யும் இவர்கள் திரட்டினர். உள்நாட்டுப் பகுதிகளில் தூரந்தொலைவில் பல இடங்கள் இந்தப் படையின் ஆட்சியில் இருந்தன. இவர்கள் வரிகளை வசூலித்தார் கள்; பிரெஞ்சு ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர்களைத் தண்டித்தார்கள்; சில சமயம் அவர்களைக் கொன் றார்கள். பென் கெட்டா ஆகியோர் கொரில்லாப் படையை ஒழிக்க, 5 லட்சம் பேர் கொண்ட பிரெஞ்சுப் படையைப் பிரெஞ்சு அரசினர் ஏவிவிட்டனர். முதலில் கொரில்லாப் படையிடம் பிரெஞ்சுப்படை தோற்றது. இதனால் பிரெஞ்சு வீரர்கள் ஆத்திரத்துடன் போரிட்டனர். ஆத்திரத்தில் நிதானம் தவறினர். அதன் விளைவாக, பொது மக்களின் ஆதரவு கொரில்லாப் படைக்குப் பன்மடங் காகப் பெருகிற்று. பிரெஞ்சு அறிஞர்கள் அல்ஜீரி யாவில் நடக்கும் கிளர்ச்சிக்கு ஆதரவாகவும் பிரெஞ்சு அரசினரைக் குறைகூறியும் எழுதலாயினர். கொரில் லாப் படை, 40,000 பேர் கொண்ட செம்மையான முறையான படையாக 1958-ல் மாறிற்று. இனிமேல் பிரான்சு அல்ஜீரியாவை ஆள முடியாது என்று டி கால் கருதினார்; அவர் கருத்தைப் பிரெஞ்சுப் படையினர் ஏற்கவில்லை. 1960-ல் ஆட்சியாளர்க்கும் போர் வீரர்க்கும் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க, அல்ஜீரி யாவில் 1961-ல் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் விளைவாக. அல்ஜீரியா ஒரு சுதந்திர நாடு என்று 3-7-1962-ல் டிகால் அறிவித்தார்.
பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/37
Appearance