உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 கான்ஸ்டன்டைன் வட ஆப்பிரிக்காவின் உள்நாட்டு நகரங்களுள் இதுவே முக்கியமான நகரம். ஏழரை ஆண்டுகள் நடந்த விடுதலைப்போரில் இந்த நகரம் சேதப்பட்டது. இன்றைய நகரம், முற்றிலும் புதுப்பித்துக் கட்டப்பட்ட நகரம். ஈராயிரம் ஆண்டுகளாக இந்நகரம் கிழக்கு அல்ஜீரி யாவில் வணிகப் பெரு நகரமாக விளங்கி வந்திருக் கிறது. கடற்கரையிலிருந்து இது 60 மைல் தொலைவி லும் அல்ஜீயர்சிலிருந்து 350 மைல் தொலைவிலும் இருக்கிறது. உள்நாட்டு நகரமாய் இருந்தபோதும் இங்கும் ஏராளமான வெளிநாட்டவர் இருக்கிறார்கள். இந்நகருக்கு நீண்ட வரலாறு உண்டு. 82 போர் களில் இது களமாக இருந்திருக்கிறது. மிகப் பழமை யான பொருள்களை புதை பொருள் துறையினர் இங்கு கண்டு, பிடித்திருக்கிறார்கள். ரோமாபுரிப் பேரரசின் போது இந்நகரம் சிற்றா என்ற பெயருடன் விளங் கிற்று. கி.மு. 311-இல் இந்த ஊர் அழிந்துவிட்டது. ரோமாபுரியை ஆண்ட கான்ஸ்டன்டைன் என்ற பேரர சர் இந்த நகரைப் புதுப்பித்தார். அவர் பெயராலேயே இந்நகரம் இன்று விளங்குகிறது. மாறிமாறி எத்த னையோ படையெடுப்புக்களுக்கு இந்த நகரம் ஆளா யிற்று. சலாபே என்ற அரசரின் ஆட்சியில் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் 23 ஆண்டுகள் இந்த நகரின் பொற்காலமாக இருந்தது. சாலைகளும் பாலங்களும் கட்டிடங்களும் நூலகங்களும் ஏற்பட்டன. கான்ஸ்டன்டைனும் அவருக்குப் பிறகு சலாபேயும் அவருக்குப் பின் வந்த எத்தனையோ பேரும் கொல்லப் பட்டிருக்கின்றனர். 19-ஆம் நூற்றாண்டிலும் இந்த