பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்துக் குளிக்க வாரீகளா?' என்று முணுமுணுப்பாய்ப பாடினார் மனோரமா.

நீங்க நல்லாத் தமிழ் பேசறீங்களே' என்றார் கன்னன். "நான் தமிழ்நாட்டில் அஞ்சு வருஷம் தங்கிக் குறள் படிச்சேன். திருக்குறள் முனுசாமிதான் எனக்கு வாத்தியார்!"

அப்படியா ஒரு குறள் சொல்லுங்க பார்க்கலாம்."

ஷோஜோ தமது கட்டைக் குரலில் சொன்னார்:

தேறினுந் தேறாவிடினு மழிவின்கட்

டேறான் பகாஅன் விடல். -

"குறள் நல்லாயிருக்குங்க; உங்க குரல்தான் சரியாயில்லை. குறளை சரியாப் பதம் பிரிச்சு சொல்லத் தெரியணும். நாளைக்கு ஒரு கறும்பலகையும் சாக்பீஸும் கொண்டாங்க. நான் பதம் பிரிச்சு எழுதி விளக்கம் சொல்றேன்" என்றார் கன்னன்.

"தேர் விடறதைப் பத்தி எங்க வள்ளுவர் அந்தக் காலத்திலேயே எவ்வளவு அழகாச் சொல்லிட்டார் பார்த்தீங்களா?' என்று மகிழ்ந்தார் புள்ளி சுப்புடு-

"வாயை முடிக்கிட்டுப் பேசாம இருங்க. மானம் போகுது. தெரியாத விஷயத்துல தலையிடக்கூடாது. அந்தக் குறளுக்கு இதுவா அர்த்தம்?' என்று தலையிலடித்துக் கொண்டார் கன்னன்.

மொத்தம் 1880 குறள், நாம் விடப் போகிற தேரையும் 1880 அடி உயரத்துக்குச் செய்தால் பொருத்தமாயிருக்கும்' என்று புள்ளி சுப்புடு யோசனை கூறினார்.

'நீங்க மொத்தம் எத்தனை பேர் வந்திருக்கீங்க?" --கோமோச்சி கேட்டார்.

'முப்பது பேர்!" - "வள்ளுவரையும் சேர்த்தால் முப்பத்தொண்ணு' என்றார் புள்ளி.

"நீங்க இங்கே அஞ்சு பேர்தானே வந்திருக்கீங்க. மத்தவங்கெல்லாம்...?' • . - "அலங்கல்லாம் டயச்சி ஓட்டல்ல தங்கியிருக்காங்க!"

"கின்ஸா ட்யச்சியா, ஷிம்பாஷி டயச்சியா" "

அட, ரெண்டு டயச்சி இருக்கா இந்த ஊர்ல. அது. .6 - - -