பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாச் கட்டிக்கொள்வது போன்ற வேடிக்கைகளை டெலிவிஷனில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர், விழாவுக்கு வரமுடியாத ஜப்ப்ானிய மக்கள்! - மறுநாள் மாலைதான் தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. இரவு விருந்துக்குப் பின்னர் தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த தேர்க் குழுவினர் அத்தனை பேருக்கும் சக்ரவர்த்தி திம்ப்தியர் பரிசுகள் வழங்கி வழி அனுப்பி வைத்தனர். வடம் பிடித்து இழுத்தவர்கள் எல்லோரையும் சக்ரவர்த்தி மேடைக்கு அழைத்து ஒவ்வொருவரையும் கைகுலுக்கி “நீங்கள் உதவி செய்யவில்லையென்றால் தேர் நகர்ந்திருக்காது. உங்களுக்கு நன்றி கூறுவதுடன் உங்களுடைய கையில் இந்த வீக்கோ ரிஸ்ட் வாச்சை என் அன்பளிப்பாகக் கட்டி மகிழ்கிறேன்' என்று கூறி ஒவ்வொருவர் கையிலும் வாச்சைக் கட்டிவிட்டார்! - அடுத்தாற்போல் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனை அழைத்து உலகத்தின் உயர்ந்த பண்பாளர்' என்ற எழுத்துக்கள் பொறித்த தங்கப்பதக்கம் ஒன்றை அவர் கழுத்தில் அணிவித்தார். அத்துடன் கிஸ்ஸான் (க்ளோரியா) கார் ஒன்றும் அவருக்குப் பரிசாக அளித்தார். - - - 'ஓடி ஆடி வேலை செய்து விழாவை வெற்றிகர மாக்கிய விழாவேந்தனுக்கு சக்ரவர்த்தி என்ன பரிசு தரப் போகிறாரோ' என்று சிலர் அந்தக் கூட்டத்தில் பேசிக்கொண்டனர். "அவர் எங்கே ஆடினார்? ஒடமட்டும்தம்னே செய்தார்! பத்மா சுப்ரமணியம், சுதாராணி ரகுபதி இவங்கதானே ஆடினாங்க!' என்றார் மனோரமா. விழாவேந்தனுக்கு டோயோடா (கிரெளன், கசச் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துக் கைகுலுக்கினார் சக்ரவர்த்தி. தயாளு அம்மாள், எம். எஸ். சுப்புலட்சுமி, ராஜாத்தி, அம்மாள், மனோரமா, மணிகிருஷ்ணசாமி, பத்மாசுப்ரமணியம், சுதாராணி ரகுபதி ஆகிய ஏழு வி.ஐ.பிக்களுக்கும் மகாராணி ஏழு வைர நெக்லஸும் முத்துமாலைகளும் அணிவித்து கெளரவித்தார். மனோரமாவுக்கு மட்டும் மதிப்புமிக்க கிமோனோ உடை ஒன்றும் சிறப்புப் பரிசாகக் கொடுத்தார்! - காமகிரிப்பேடடை கிருஷ்ணனுக்கு ஒரு மிட்ஸ் புஷி வேனும், தங்கச் சங்கிலியும், தவில்காரர்களுக்கு வைர ம்ோதிரங்களும் கணபதி ஸ்தபதி, கன்னன் இருவருக்கும் வி.வி.ஆருடன் கூடிய இரண்டு டி.வி. செட்டுகளுடன் வைர மோதிரங்களும் பரிசாகக் கொடுத்து கன்றி தெரிவித்தார்.