பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புள்ளி சுப்புடுவுக்கு லேட்டஸ்ட் மாடல் காளியோ கால்குலேட்டருடன் கிக்கான் காமிராவும் கொடுத்து வாழ்த்தினார். தமிழ்காட்டிலிருந்து வந்து விழாவுக்காக அரும்பாடுபட்ட அத்தனை தமிழர்களுக்கும் ஆளுக்கொரு ஸோனி டு-இன்-ஒன்! கடைசியாக, கல்லி குப்புசாமி ஜப்பான் சக்ரவர்த்திக்கும் மகாராணிக்கும் பொன்னாடை போர்த்தி தமிழ்நாட்டின் சார்பில் கன்றி கூறினார். சக்ரவர்த்தி அவருக்கு கவரத்னக் கற்கள் பதித்த மோதிரம் ஒன்றை வழங்கி பதில் மரியாதை செய்தார். அதே மேடையில் இருபத்து காலு காரட்டில் இரண்டடி உயரத்தில் செய்யப்பட்ட தங்கத்தேர், ஒன்றைக் கலைஞருக்குப் பரிசாகத் தந்த சக்ரவர்த்தி கலைஞரைக் கட்டித் தழுவிக்கொண்ட காட்சி மறக்கமுடியாதது! . - - ஊருக்குப் புறப்படுமுன் எல்லோரும் அரண்மனையைப் பின்னணியாக வைத்து சக்ரவர்த்தி குடும்பத்தாருடன் ஒரு க்ருப் போட்டோ எடுத்துக்கொண்டனர். - "மட்டா டோலா! திரும்பி வாருங்கள்' என்று உளம் கனிந்து கைகூப்பி வழி அனுப்பி வைத்தனர் மகாராஜாவும் மகாராணியும். - - - கண்களில் நீர்களும்ப சக்ரவர்த்தியையும் மகாராணியை யும் பிரிய மனமின்றி "ஸ்யோனாரா போய் வருகிறோம்' என்று சொல்லிப் புறப்பட்டனர் தேரோட்டக் குழுவினர். முற்றும்.