பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றி பித்தனை முறை ஜப்பானைப் பார்த்தாலும் எனக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. அந்த காட்டின் வசீகரம் என்னைத் . திரும்பத் திரும்ப அழைக்கிறது! 'வடம் பிடிக்க வாங்க தொடர் எழுதுமுன் அக்காட்டை இன்னொரு முறை போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். புறப்படு முன் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்து "திருவாரூர்த் தேர்போல் ஒன்றைச் செய்து, அதில் வள்ளுவர் சிலையை வைத்து, டோக்கியோ நகரில் விடப் போகிறேன். கற்பனை யில்தான் வடம் பிடிக்க வாங்க' என்பது தலைப்பு. இதற்காக இப்போது ஒரு முறை ஜப்பான் போய் வரப் போகிறேன்' என்றேன். - கலைஞர் சிரித்தார் ஏதாவது ஒரு சாக்கு கிடைத்தால் போதும்; நான் ஜப்பான் போய் வந்து விடுவேன் என்பது அவருக்குத் தெரியும்! "சரி; கதைக்கு என்ன தலைப்பு சொன்னிர்கள்? 'வடம் பிடிக்க வாங்க...' என்றா? தேரோட்டம் ஜப்பானில் கடக்கிறது என்று தெரியவேண்டாமா? ஆகவே, வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு’ என்று தலைப்பைக் கொஞ்சம் நீட்டி விடுங்கள்' என்றார். அவர் யோசனைப்படியே செய்துவிட்டேன். கலைஞர் அத்தோடு கின்று விடவில்லை. ஜப்பானுக்கே கேரில் வந்து (கற்பனையில்தான்) வடம் பிடித்து விழாவைத் தொடங்கியும் வைத்தார். - - 'அந்தத் தொடக்க விழாவில் தாங்கள் என்ன பேசுவீர்கள்ோ அதை எழுதித் தர வேண்டும்' என்று கலைஞரிடம் கேட்டுக் கொண்டேன். - *. - 111