பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றிரவே அக்கட்டுரைத் தொடர் வந்திருந்த சாவி இதழ்கள் அன்ைத்தையும் ஒரே மூச்சில் படித்துவிட்டு என்னைப் போனில் அழைத்துப் பாராட்டியதோடு தம் சொற்பொழிவையும் எழுதி அனுப்பி வைத்துவிட்டார்! மறுநாள் கலைஞரைக் கோட்டையில் சக்தித்தேன். இவ் வளவு பிரச்னைகளுக்கும் இடையறா வேலைகளுக்கும் ஈடு கொடுத்து ஓய்வு ஒழிவு இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தங்களால் எப்படித்தான் இதையும் எழுதித்தர முடிந்ததோ! இத்தனைக்கும் இது உங்களுடைய வேலை அல்லவே! எனக்குச் செய்யும் உதவி அல்லவா?' என்றேன். - 'இல்லை, இல்லை! இது என்னுடைய வேலைதான்' என்று அழுத்தமாகச் சொன்னார். என் கட்டுரைச் சிப்பிக்குள் கலைஞரின் சொற்பொழிவு எனும் முத்து கடந்த இதழில் ஒளிவீசிப் பிரகாசித்ததை வாசகர்கள் பார்த்திருப்பார்கள். அதில் அவர் குறிப்பிட்டுள்ள கருவாட்டுக் கதை நகைச்சுவையோ டு மணம் வீசி மகிழ்விக்கிறது! அவருக்கு என் இதயபூர்வமான கன்றி. இதயம் வங்கி சேர்மன் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் இந்த விழாவைச் சிறப்பாக கடத்தி வைக்கத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்ததோடு ஜப்பானுக்கே வந்திருந்து தம்முடைய முழு ஒத்துழைப்பையும் நல்கி இக்கத் தேரோட்ட விழாவைச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்திக் கொடுத் துள்ளார். அவருக்கும் என் நன்றி. - - கதைக்கு ஏற்ப, உயிரோட்டமான கதாபாத்திரங்களை உருவகப்படுத்தி வாசகர்களை மகிழ்விப்பதில் ஓவியர் கோபுலுவை யாரும் மிஞ்சிவிட முடியாது. இந்தக் கதையில் பங்கு பெற்றுள்ள இந்திய்ன் வங்கி கோபாலகிருஷ்ணன், விழா வேக்கன், கன்னன், மனோரமா, புள்ளி சுப்புடு ஆகியவர்களை கோபுலு எவ்வளவு சிறப்பாக ஜொலிக்க வைத்திருக்கிறார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அவருக்கும் என் நன்றி. • -சாவி 112