பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரும்பி நடந்தே வந்தார்கள். கின்ளா போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர் முலையில் தெரிந்தது அந்த பார்லர்! விக்னலுக்குக் காத்திருந்து, ரோடைக் கடந்து, சுழல் படிகள் ஏறி, மாடிக்குப் போய் இடம் பிடித்தனர். ஒரு மூ லையில் கண்ணாடி ஜன்னல் ஓரமாக சின்ன டேபிள்; எதிரும் புதிருமாய் வசதியாக இரண்டே நாற்காலிகள். கண்ணாடி வழியாகப் பார்த்தபோது கின்ஸ் ஒளிப்பூச்சிகளாய்க் கோலம் காட்டியது. மெனுகார்டை எடுத்து கிதானமாகப் பார்த்துக் கொண்டிருக்த ஜார்ஜிடம் 'இதோ ஒரு நிமிஷம், என் தோழிக்கு டெலிபோன் செய்துவிட்டு வந்துவிடுகிறேன்' என்று எ முக்த கிஜிமா கைப்பையை நாற்காலிமீது வைத்துவிட்டுப் போனாள். 'அந்தப் பைக்குள் சர்க்கார் ரகசியங்கள் ஏதேனும் இருக்கலாம்' என்று யோசித்தான் ஜார்ஜ். மனம் பரபரத்தது. கிஜிமா திரும்பி வருவதற்குள், அவளுக்குத் தெரியாமல் அதை எடுத்துச் சோதித்துவிடத் துணிக்தான். குற்ற உணர்வோடு சுற்றுமுற்றும் பார்த்தான். யாருமே இவனை கவனிக்கவில்லை. சட்டென்று அந்தப் பையை எடுத்து அதிலிருந்த சில கடிதங்களை அவசரமாய்ப் படித்தான். அவன் எதிர்பார்த்த, அவனுக்குத் தேவையான சில ரகசியங்கள் அதில் இருந்தன! - இதயம் படபடக்க, சில விலாசங்களையும் தேதிகளையும் தன் டயரியில் வேகமாய்க் கிறுக்கிக்கொண்டு அக்தக் கடிதங் களைப் பழையபடியே பையில் வைத்துவிட்டான். - கிஜிமா நிதானமாகத் திரும்பி வந்து எதிரில் உட்கார்ந்து தலையைக் கோதிக்கொண்டாள். 'ஜார்ஜ் என்ன சாப்பிடுகிறீர்கள்? இங்கே மிஸ் பேரட்' ஐஸ்க்ரீம் ரொம்ப பாபுலர். திருமணமாகாத இளம் ஜோடிகள் அதைச் சாப்பிடுவதற்கென்றே இங்கு வருவார்கள்' என்று கூறிச் சிரித்தாள். 'Miss Parrot!" என்றவன் "இங்கே எப்போதும் கூட்டம்தானா?' - . "ஆமாம்; காதலர்கள் உல்லாசப் பொழுதுபோக்க இங்கே வருவார்கள் கிதானமாய் உரையாடிக்கொண்டே ஐஸ்க்ரீம் சுவைப்பார்கள்.' - - 'எனக்கு மிஸ் பாரட் ரொம்பப் பிடித்திருக்கிறது." "இன்னொன்று சாப்பிடுகிறீர்களா?" வேண்டாம். காளைக்கும் இங்கே வருவோம்.' 20