பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று. இரண்டு என்று தொடங்கி ஐந்து வரை விரல் விட்டு எண்ணினார் புள்ளி சுப்புடு, அப்படி எண்ணும்போது நம் ஊர் வழக்கப்படி இல்லாமல், கட்டைவிரலில் தொடங்கி சுண்டுவிரலில் முடித்தார். - 'இதென்னய்யா தலைகீழ்ப்பாடமா கட்டைவிரல்லேருந்து எண் lங்க! இது எந்த ஊர் வழக்கம்?' என்று கேட்டார் முத்து. 'இது ஜப்பான் காட்டு வழக்கம். காமெல்லாம் சுண்டு விரல்லே ஆரம்பிச்சு கட்டை விரல்லே முடிப்போம். இங்கே கட்டைவிரல்தான் முதல் கம்பர்! பி எ ரோமன் வென் யு ஆர் இன் ரோம்!' என்றார் புள்ளி சுப்புடு. - "சரி, அஞ்சங்கறது என்ன கணக்கு?' -முத்து கேட்டார். "இன்னைக்கு அஞ்சாவது நாள் இண்டியன் பாங்க் சேர்மன் கோபாலகிருஷ்ணன் வரசர். ஆறாவது நாள் காலையில ஒன்பது மணிக்கு பந்தக்கால் முகூர்த்தம். பந்தக்கால் துனியில் மாவிலை கட்டி மங்கள வாத்திய இசையோட கோபாலகிருஷ்ணன் ஊன்றி வைப்பார். ராசியான கை!" - 'பந்தக்காலா? அது எதுக்கு!" "அரண்மனை கிழக்கு வாசல்லேதான். தேரோட்டம் தொடங்கப் போறோம். அந்த இடத்துலயே வேற ஒரு லைட்ல ஷாமியானா போட்டு தேர் ஃபெஸ்டிவல் ஆபீஸ் அமைக்கணும். தேரோட்டம் சம்பந்தமான எல்லா ஏற்பாடுகளையும் அந்த ஆபீஸ்தான் கவனிச்சுக்கும்.' "கொஞ்சம் விவரமாச். சொல்லுங்க.." 22