பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மஞ்சள் பொடியில் பிடித்து வைத்திருந்த பிள்ளையாரைப் பார்த்துவிட்டு "அது என்ன?' என்று கேட்டார் மகாராணி. 'பிள்ளையார்' என்றார் முத்து. - "அப்படியானால் விநாயகர் பிள்ளையாருக்கு என்ன உறவு?" என்று கேட்டார் சக்ரவர்த்தி. 'விநாயகர், பிள்ளையார், விக்னேசுவரர். கணபதி எல்லாப் பெயர்களும் ஒரே கடவுளைக் குறிக்கும். இங்கிலீஷில் எலிஃபண்ட் காட் என்று சொல்வார்கள்' என்றார் முத்து. அடுத்தாற்போல் கோபாலகிருஷ்ணன் கணபதி ஸ்தபதியை சக்ரவர்த்திக்கு அறிமுகப்படுத்தி, 'இவர் தான் எல்லா தெய்வங் களையும் சிலையாகச் செய்பவர். தமிழ்நாட்டின் பெருமைக்குரிய மகா சிற்பி. இப்போது அரண்மனைக்குள் வள்ளுவர் சிலை செய்து கொண்டிருக்கிறார்' என்றார். - "நேரமாச்சு; கொடியேத்தனும், கொடிக் கம்பம் பக்கம் வாங்க' என்று எல்லோரையும் அவசரப்படுத்தி அழைத்துச் சென்றார் விழாவேந்தன். ஜப்பானியர் பாண்டு வாத்தியம் வாசித்து முடிந்ததும் திரு கோபாலகிருஷ்ணன் மைக் முன் போய் கின்று தமது வரவேற்புரையைத் தொடங்கினார். { { சிக்ரவர்த்தி அவர்களே! டிகாராணி அவர்களே! இங்கு கூடியுள்ள பெரியோர்களே! உங்கள் எல்லோரையும் தமிழகத்தின் சார்பிலும், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் சார்பிலும் இங்கே வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சூரியனைத் தெய்வமாகப் போற்றுகிற நாடு இது. சக்ரவர்த்தி பரம்பரையே சூரியனிலிருந்து வந்ததுதான் என்றொரு கம்பிக்கை இங்கே உண்டு. உங்களைப் போலவே நாங்களும் தமிழ்காட்டில் சூரியனைத் தெய்வமாக வழிபடுகிறோம். எங்கள் தமிழக விவசாயிகள் பொங்கலன்று சூரியனுக்குப் பொங்கல் படைக்கிறார்கள். சூரிய கமஸ்காரம் என்பது எங்கள் காட்டில் தொன்று தொட்டு வந்துள்ள வழிபாடாகும். ஆகவே, சிவப்பு வட்டச் சூரியனையும் அத்துடன் எங்கள் வள்ளுவர் கோட்டத்தை யும் இணைத்து இந்த விழ்ாவின் சின்னமாகக் கொடியில் பதித்து, அந்தக் கொடியை இன்று இங்கே சக்ரவர்த்தி அவர்கள் ஏற்றி வைக்க இசைந்துள்ளார்கள். இந்த விழாவின் மூலம் கமது கலாசார உறவுக்கு ஒரு நிலையான பாலம் அமைக்கப் போகிறோம் என்பதில் கம் இரு நாடுகளுமே பெருமைப்பட லாம். 59