பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இப்பவாவது ஞாபகம் வருதே!' ஸாரி மேடம்' - . ஜப்பானிய முகங்கள் அவனுக்கு இன்னும் பிடிபடவில்லை. "ஜார்ஜ் அன்று முதல் உங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கேன். ஆனால், அது உங்களுக்குத் தெரியாது.' திடுக்கிட்டான். பென்னட்டின் எச்சரிக்கைக் குரல் கேட்டது. "எதிரி உளவாளிகளும் எங்கேயும் இருப்பாங்க." “என்னைப் பின்பற்றி வரதாச் சொல்றீங்களே, நீங்க என்ன உளவாளியா?' என்றான் பதட்டத்துடன், "ஆமாம் சொல்லப் போ ன ல் ஒரு விதத்துல உளவாளிதான்...' . 3. எப்படி?" உங்களைப் பார்த்ததிலிருந்து எனக்கு என் மனம் என் வசம் இல்லாமல் போயிட்டுது. உங்க நீல விழிகள், உயரம், தோற்றம் எல்லாமே என்னைக் கவர்ந்து இழுத்தது. விளையாட்டா கினைக்காதீங்க; எனக்குப் பிடிச்ச மாதிரி வாழ்க்கையிலே நீங்கதான் சரியா அமைஞ்சீங்க அன்று முதல் உங்களைப் பின்தொடர்ந்துகிட்டே இருக்கேன்!' ஜார்ஜுக்குக் குழப்பம் சற்றுத் தணிந்தது. "உன் பேச்சை நம்பலாமா?' என்றான். . "ஐ லவ் யு ஜார்ஜ் என்னை கம்புங்க. சத்தியமாச் சொல்றேன். என்னாலே உங்களை மறக்க முடியலே! உங்கள் கவனத்தை எப்படியாவது என் பக்கம் ஈர்க்கணும்னு விரும்பி அதுக்காக ரொம்ப முயற்சி செய்தேன். நீங்க அன்னைக்கு ஐஸ்க்ரீம் பார்லர் போவதைப் பார்த்தபோதுதான் எனக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சுதுன்னு கினைச்சேன்' "ஓ!' நல்ல வேளையா நீங்க டயரியை வச்சுட்டுப் போயிட்டிங்க! யாரும் பார்க்காத கேரத்தில அந்த டயரிக்குள் என் விசிட்டிங் கார்டை வெச்சட்டேன்' என்றாள் ஷாமாசிச்சி. - அந்த டயரியைத் திறந்து பார்த்திங்களா?" என்று கேட்டான் ஜார்ஜ் அவசரத்துடன். - - 63