பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 Hள்ளி சுப்புடு பரம திருப்தியோடு ஏப்பம் விட்டுச் கொண்டு வந்தார். - 'அரண்மனை சாப்பாடு ரொம்ப பலம்போல இருக்கு' என்றார் மனோரமா. "ஆமாம்; மனுஷனுக்குச் சாப்பாட்ல கிடைக்கிற திருப்தி வேற எதுலயும் கிடைக்காது. எடைக்கு எடை பொன்னை அள்ளிக்" கொடுங்க. போதும்னு சொல்லமாட்டான். மண்ணை அளந்து கொடுங்க-அதிலும் திருப்தி ஏற்படாது. சாப்பாடு ஒண்ணுலதான் திருப்தி ஏற்படும். போதும் போதும் வயிறு கிரம்பிட்டுது. இனி வேண்டாம் என்பான். கம்பூதிரி கதை தெரியுமா உங்களுக்கு?' என்று கேட்டார் புள்ளி. - தெரியாதே' 'கம்பூதிரி ஒருத்தர் விருந்துக்குப் போயிருந்தார். வயிறு கொண்ட மட்டும் சாப்பிட்டார். திருப்தியாயிட்டுது. அந்த நிறைவில் "இனிமே சொத்து பத்தெல்லாம் எதுக்கு? அதான் திருப்தியாயிட்டுதே, போதும்’னு சொல்லி தன் சொத்தை. யெல்லாம் மத்தவங்களுக்கு வில் எழுதி வச்சுட்டார்' "அப்புறம்?" - "அப்புறம் என்ன? மறுபடி ராத்திரி பசி எடுத்ததும் மனசு மாறிப் போச்சு; வில்லை கேன்ஸல் பண்ணிட்டார்' 'இந்த ஜப்பானைப் பார்க்கப் பார்க்க எனக்கு இங்கயே கிரந்தரமா குடியேறிடலாம் போலிருக்கு' என்றார் விழா வேந்தன். - - 'கொடியேற்றம் ஆயிட்டுது. இப்ப மெதுவா குடி யேற்றத்துக்கு அடி போடlங்கள ச?' என்று கேட்டார் மனோரம்ா. 66