பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லேசாக ஒரு மெளன அடி வைத்து முன்னால் வந்தான். முன்னிலும் மெலிதாக "லாரி, பென்னட் முடியாமல் போச்சு!" என்றான். - பென்னட் மெதுவாகத் தலையைத் தூக்கினான். அவன் பார்வையைச் சக்திக்கும் தைரியம் இன்றி தலையைக் கவிழ்த்துக் கொண்டான் ஜார்ஜ். கண்களில் கலக்கம். - "பரவாயில்லை; வருக்கப்படாதே. இன்னொரு வழி இருக்கிறது" என்றான் பென்னட். ஜார்ஜ் அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. "வருத்தப் படாதே ஜார்ஜ்! நீ எவ்வளவோ முயற்சி பண்ணினே! ஆனா வைக்க முடியலை! அதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கிலே. எனக்கு எல்லாம் தெரியும். அந்த கிஜிமா துறு துறுன்னு உன்னையே கவனித்துக் கொண்டிருந்தாள், இல்லையா?" ஜார்ஜால் நம்பக்கூட முடியவில்லை, பென்னட் குரலா அது? அவனா இப்படிப் பேசுகிறான்? இத்தனை சமாசாரங்களும் எப்படித் தெரிந்தன. இவனுக்கு!' "பயப்படாதே சமயத்திலே சக்தர்ப்பம் அப்படித்தான் எதிரிடையா அமையும் அதற்காகச் சோர்ந்துவிடக் கூடாது. உடனே தீவிரமாச் சிந்தித்து ஒரு வழி கண்டுபிடிச்சடலாம். இப்போ எனக்கு ஒரு விஷயம் சொல்லு!... பிரஸ்மிட் முடிஞ்சப்புறம் யாரிட்டியோ பேசிட்டிருக்கியே, அது யார்' ஜார்ஜின் முகம் லேசாக மலர்ந்தது."அது அந்த இந்தியக் குழுவோடு வந்துள்ள ஆளுங்க! ஏதோ புள்ளின்னு பேர் சொல்றார்!" . . . 'கையிலே காமிரா வச்சுட்டுப் பேசிட்டிருந்தார்ே, அவர் தானே!" - - "ஆமாம் பாஸ் என் காமிராவைப் பார்த்து விசாரிச்சான்! பதில் சொன்னேன்! காமிராக்களைப் பத்தி கிறையத் தெரிஞ்சு வச்சிருக்கான். நாளைக்குக் கூட்டத்திலே வர்ற வெளிநாட்டுத் தலைவர்கள் அத்தனை பேரையும் போட்டோ எடுக்கப் போறதாச் சொன்னான்.' .. "ஓ! எப்படி, எங்கிருந்து எடுக்கப் போறானாம்?" தேர் மேலேயே ஏறி கின்னு எடுக்கப் போறானாம். இண்டியன் பார்ட்டியில முக்கியமான ஆளாக் தெரியுது." 75