பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஸ்! அவனாலே இதைப் புரிஞ்சுக்க முடியுமா?" 'ஒண்ணுமே வேண்டாம்! இதோ பார்!" பென்னட் எதையோ மெல்லிசாகத்தொட லபக்' என்று வியூ-பைன்டர் மேலே எகிறியது. அதில் அழகாக அந்த அறைக் காட்சிகள் தெரிந்தன. "இதை வச்சு சாதாரணமா ஃபோகஸ் செய்தாப் போதும். அப்படியே ட்ரிகரை அழுத்தச் சொல்லு எல்லாம் சரியாப் போயிடும்!' - ஜார்ஜ் காமிரா முகப்பைப் பார்த்தான். சாதுவாக லென்ஸ் லேத்தில் கிரித்தது, ஒரு சுற்றி வர வளையத்தில் எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன. "பாஸ்' என்றான்.

ரொம்பக் கேட்காதே! ட்ரிகரை அழுத்தினா லென்ஸ் விலகும். ஒரு புல்லட் உஸ்னு கிளம்பி பிரெஞ்சு பிரஸிடெண்டைப் போய்த் தாக்கும்!"

"ஐயோ பென்னட் அந்த இண்டியன் ஒரு மக்கு அவ்வளவு துல்லியமா பிரஸிடெண்டை ஃபோகஸ் பண்ணத் தெரியாது அவனுக்கு!" - - - விமான இறக்கையில் பளிச்சிடுவது போல், பென்னட்டின் கண்களில் ஒரு வெளிச்சம் அடித்தது. - 'ஜார்ஜ் இ ல்வளவுதான் நீ என்னைப் புரிஞ்சுக்கிட்டதா இது என்ன சாதாரண காமிராவா?' - - ஜாஜ் அசடாக விழித்தான். - "பிரெஞ்சு பிரஸிடெண்ட் உருவத்தை காமிரா மெமரியிலே பதிச்சு வச்சிருக்கேன்! பிரங்கிடெண்ட் கிற்கிற இடத்தை நோக்கி காமிராவைச் சம்மரத் திருப்பி விசையை அமுக்கினாப் போதும். பிரஸிடெண்டை இந்தக் காமிரா முதல்லே அடையாளம் கண்டு பிடிச்சுக்கும் உள்ளே உடனே எலெக்ட்ரானிக் மாயங்கள் கடந்து, ஒரு ரகசிய துப்பாக்கிக் குழல் தானாக இலக்கை கோக்கித் திரும்பி கிற்கும். அடுத்த கணம் புல்லெட் ஒண்னு சத்தம் போடாமல் கிளம்பி பிரஸிடெண்ட்டைத் தாக்கும்' ஜார்ஜ் வாயைப் பிளந்தான். 'விஷயம் என்ன நடந்ததுன்னு தெரியறதுக்குள்ளே பத்து கிமிடம் ஆயிடும்! அதுக்குள்ளே காம்ப ஹாங்காங் பறந்துடலாம்!' & -