பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வடவேங்கடமும் திருவேங்கடமும் வடநாட்டுத் திருப்பதிகள் பன்னிரண்டனுள் முதலாகக் கூறப் பெறுவது. இதனைத் திவ்விய கவி, தானே சரணமுமாய்த் தானே பலமுமாய்த் தானே குறைமுடிக்குந் தன்மையான்-தேனேய் திருவேங் கடந்தொழுதேம் தீய விபூதிக்குள் கருவேம் கடந்தனெமில் வாழ்வு’. (சரணம்-உபாயம்; பலம்-உடேயம்: தேன் ஏய். தேன் நிறைந்த தீய விபூதி - லீலா விபூதி, மருவேம்-பொருந்தேம்} என்று சிறப்பித்துப் பாடுவர். வேதாந்த தேசிகரும், கண்ணனடி யிணைஎமக்குக் காட்டும் வெற்பு; கடுவினையர் இருவரையும் கடியும் வெற்பு; திண்ண மிது வீடுஎன்னத் திகழும் வெற்பு; தெளிந்தபெருந் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு; புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்பு; பொன்னுலகிற் போகமெலாம் புணர்க்கும் வெற்பு; விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு; வேங்கடவெற்பு என விளங்கும் வேத வெற்பே (கடியும்-ஒழிக்கும்; திண்ணம்-உறுதி; செறிந்தநிறைந்த புகல்-இருப்பிடம்: டொன் உலகு-பரம பதம்; புணர்க்கும்-அடைவிக்கும்) என்று போற்றிப் புகழ்வர். இத்தகைய பெருமை வாய்ந்த திருவேங்கடத்தைப் பற்றிய பாசுரங்கள் 213 திவ்விய பிரபந்தத்தில் உள்ளன. இவற்றைப் பாடியவர்கள் பதின்மர்; பத்து ஆழ்வார்கள். நூற். திருப். அந்: 96 4. தே. பி. 82