பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() வடவேங்கடமும் திருவேங்கடமும் بیمه میس------------- என்ற நம்மாழ்வார். பாசுரம் இக் கருத்திற்கு அரண் செய்வதாக அமைகின்றது. அசித்தின் பெயரைச் சொன்ன வுடனேயே எம்பெருமான் மனம் மகிழ்ந்து நமக்குத் திருவருள் பாவிக்கும் பெருமை பேசப்படுகின்றது. இதில், திருமா விருஞ்சோலை மலைஎன்றேன்; என்னத் திருமால் வந்துஎன் நெஞ்சுநிறையப் புகுந்தான். -திருவாய் 10.8:1 என்ற திருவாய்மொழிப் பாசுரம் இதற்குச் சான்றாக நிற்கின்றது. திருவேங்கடமாமலை பற்றிய நம்மாழ் வாரின், 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா! நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே! நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. -திருவாய். 6.10:10 יית என்ற பாசுரம் சரணாகதித் தத்துவத்தை விளக்குவதாக அமைகின்றது. இதில், நிகரில் புகழாய்' என்பதனால் வாத்சல்யம் என்னும் குணத்தையும், உலகம் மூன்று உடையாய் என்பதனால் சுவாமித்துவம் என்னும் குணத் தையும் என்னை ஆழ்வானே' என்பதனால் செளசீல்யம் என்னும் குணத்தையும் திருவேங்கடத்தானே' என்பத னால் செளலப்பியம் என்னும் குணத்தையும் தெரிவிப்ப தாகப் பெரியோர் பணிப்பர். பிராட்டியின் புருஷகார பலத்தாலே ஈசுவரனுடைய சுதந்திரத் தன்மை மாய்ந்து