பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii நிலையில் உள்ள சில குன்றுகளாய், தமிழ் நாட்டுக்கு வடபுறத்தில் நடுவில் மட்டும் நிலைத்து, ஒரளவு நீரும் நிழலும் பெற்றுத் திகழ்கின்றது. மிகப் பழைய நூலான தொல்காப்பியத்திற்கு, தொல்காப்பியரோடு சேர்ந்து ஒரு சாலை மாணாக்கராய்ப் படித்த பனம்பாரனார் இயற்றிய மிகப் பழையதான சிறப்புப் பாயிரத்திலுள்ள வடவேங் கடம் என்ற சொல்லின் பொருளை, மிகப்பழையவை யான சங்க நூல்களைக் கொண்டே அறுதியிடவேண்டிய கடமை உள்ளது. அங்ங்ணம் சங்க நூல்களைக் காணும் போது, வேங்கட நெடுவரை' என்றும், நெடுவரை பிறங்கிய வேங்கட வைப்பு என்றும், 'நெடுவரை வேங் கடத் தும்பர்’ என்றும் மிகவும் நீண்ட வரிசையாகச் சேர்ந்த மலைத்தொடர்களே வேங்கடமென்று அந்நூல் களில் குறிக்கப்பட்டுள்ளதனாலும், புல்லி ஆண்ட இவ் வேங்கடப்பகுதி நிலநீரற்று நீள்சுனை வறப்பக் குன்று கோடு அகைய (=எரிய)க் கடுங்கதிர் தெறுதலின்’ என்றும், நிழற்கவின் இழந்த நீரில் நீளிடை அழலவிர் அருஞ்சுரம் என்றும், பயம் (=நீர்) தலைபெயர்ந்து (=நீங்கி) மாதிரம் வெம்ப' என்றும்- வெயில் மிகக் காய்வதனால் நிலத்திலும் சுனைகளிலும் நீர் பசையற. வற்றப்பெற்று புகுதற்கரிய பாலைவனமாகக் கூறப்பட்ட படியாலும், திருப்பதியும் அதன் கிழக்கே நெல்லூர் முதலிய ஊர்களும் மேற்கே எருமைநாடு மகிஷாசுரனுார். எனப்படும் மைசூரும் பழையகாலத்தில் தமிழ் கூறும் நல்லு லகமாக இருந்ததனால் இவையனைத்துக்கும் வடபுறத்தில் கிழக்குக் கடற்கரையில் தொடங்கிச் சற்றேறக்குறைய மேற்குக் கடற்கரைவரையில் நீண்டு சென்று, தமிழ் கூறும் நல்லுலகை வியாபித்து நிற்கிற சங்ககால வேங் கடமே வடவெல்லையாக இருக்கத் தகுதி பெற்றுள்ள படியாலும், இங்ங்னம் நீண்ட மலைத்தொடர்களாகிய சங்ககாலவேங்கடத்தை, புல்லி, திரையன், ஆதனுங்கன் என்று பெயர் படைத்த அரசர்கள் மூவரும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டமை சங்கநூல்களால் அறியக்