பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii கிடக்கின்றமையாலும், இம்மூவரின் ஆட்சிக்குட்பட்டு நீரும் நிழலுமின்றி மிகவும் வறட்சியான நிலையை யடைந்துள்ள சங்ககால வேங்கடமே மேற்கூறிய பாயிரத் தில் தமிழ்நாட்டுக்கு வடவெல்லையாகக் கூறப் பட்டுள்ளது. இதற்கு நேர் முரணான திருப்பதி மலை யன்று. நீரும் நிழலும் பொழிலுமுள்ள இத்திருப்பதிமலை வெம்மை மிக்க பாலையைக் குறிக்கும் வேங்கடமென்றும் பெயரால் முதலாழ்வார்களால் குறிக்கப்படுவது-முற் கூறிய வேங்கடத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது அப் பகுதியின் ஓரத்திலோ இம்மலை இருந்ததனாலென்று கொள்ளவேணும். பிற்காலத்தில் நம்மாழ்வார் வேங் கடம் என்ற சொல்லால், கடம்-பாவமாய், பாவங் களை வேவச் செய்யும் மலை என்ற பொருளைக் கருதி யும், புராணகாரர்கள் வேம் என்பது பாவமாய் அல்லது அழியாமையாய், கடம் என்பது எரித்தலாய் அல்லது அழியாத செல்வமாய், பாபத்தை எரிக்கும் மலை அல்லது அழியாத செல்வத்தை அளிக்கும் மலை என்னும் பொருள் களைச் சுட்டியும் இம்மலையைக் குறிப்பிட்டிருக்கின்றனர். இம்மலை புறப்பொருள் வெண்பாமாலையிலும் சிலப்பதி காரத்திலும் திருமால்திருப்பதியாகவே கூறப்பட்டுள்ளது. சைவப் பற்றுள்ள இராவ்சாகிப் கோதண்டபாணிப் பிள்ளையவர்கள் சிலப்பதிகாரத்தில் மாலவன் குன்றமாக வேங்கடமலையைக் குறித்துள்ள பகுதியை இடைச்செருக லென்று கூறுவது, ஆழ்வார்கள் அனைவரும், பழைய குருபரம்பரை முதலிய வரலாற்று நூலை இயற்றியவர் களும் ஆழ்வாருளிச் செயலுக்கு உரை செய்தவர்களு மாகிய ஆசாரியர்களும் இத்திருவேங்கடமலையைத் திருமாலின் குன்றமாகவே .ெ க ன் டி ரு ப் ப த னாலும், தேவாரம் முதலிய திருமுறைகளையியற்றிய சிவனடியார்களும், முருகவேளின் படைவீடுகளைப் பாடிய நக்கீரர் முதலிய சங்கப்புலவர்களும் இவ்வேங்கட மலையைச் சிவபெருமானுக்கோ முருகக்கடவுளுக்கோ உரியதாகப் பாடாமையினாலும் பொருந்தாது, சோழ