பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மங்கை மன்னன் கருத்தில் வேங்கடம் சோழ மண்டலத்தில் திருவாலி காடு என் ஒரு பகுதி யுண்டு. இதனை மங்கை கண்டு என்றும் வழங்குவர். இப்போது சிறப்புடன் திகழும் திருவாலி - திருநகரி"ப் பகுதியைச் சார்ந்தது சோழ வேந்தனின் தானைத் தலைவ ராகத் திகழ்ந்தவர் லேன் என்பார். இவர் கள்ளர் குலத் தைச் சார்ந்தவர். இவருக்குத் திருமகனாகப் பிறந்தவர் கலியன். பிறந்த ஆண்டு நள என்பது; மாதம், கார்த். திகை நான், முழுமதியம் கூடிய கிருத்திகை நட்சத்திரம். “கலந்ததிருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே’ என்பது இவரது வாழித் திருநாமம். தந்தை யாருக்குப் பிறகு கலியன் ஆவி நாட்டின் தலைவராகவும் சோழ மன்னனின் தானைத் தலைவராகவும் விளங்கினார். ஆலி நாட்டைச் சார்ந்த திருவெள்ளக்குளம் என்ற ஊரில் மருத்துவர் ஒருவரின் வளர்ப்புத் திருமகளார் குமுதவல்லியை மணந்து கொள்ள விரும்பி அந்த நங்கை விதித்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவேற்றும் நிலையில் இருந்தார். ஒரு நிபந்தனையின்படி திரு விலச்சினையும் பன்னிரு திருமண்காப்பும் பெற்றிருத்தல் வேண்டும் என்பது. கலியனும் திருநறையூர் சென்று அங்கு எழுந்தருளியுள்ள கம்பி திருமுன்பு திருவிலச்சினை பெற்று பன்னிரு திருமண்