பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi வடமொழிவேதங்களில் பரம்பொருள் - பயன் அதனையடையும் வழி ஆகிய இம்மூன்றும் எளிதில் விளக்கமாக அறிய முடியாது. தென்மொழிவேதங்களான ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலோ வெனில் அவற்றை எளிதில் மிக மிக விளக்கமாகத் தெளியமுடியும்-என்று வைணவப் பெருமக்கள் கருதும் உண்மையை செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஒதித் தெளியாத மறைநிலங் கள் தெளிகின்றோமே என்று வேதாந்ததேசிகர் அருளிய பாசுரப்பகுதியை மேற்கோளாகக் காட்டி உணர்த்தியமை (74 பக் ) கருதத்தக்கது. மேலும் இந்நூலில்-சித்தும் அசித்தும் ஈசுவரனு மாகிய மூன்றில் ஈசுவரனாகிய திருமாலுக்கு சீவனும் சடப்பொருளுமாகிய சித்தும் அசித்தும் உடலாக அமைந்துள்ளன (பக்கம் 92) என்பதும் இருடிகளைவிட ஆழ்வார்களும், அவர்களில் பெரியாழ்வாரும், அவரைவிட ஆண்டாளும் உயர்த்தவர்கள் (பக் 130, 131) என்பதும், வழுவிலாவடிமை இன்னது (பக் 172, 173) என்பதும், வானார்சோதி- நீலாழிச்சோதிகளைவிட வேங்கடத் தெழில்கொள்சோதி உயர்ந்தது (பக் 173, 174) என்பதும், திருமந்திரத்தின் பொருள் இன்னது (பக் 174, 175) என்பதும், நம்மாழ்வார் செய்த சரணாகதி இத்தகையது (பக் 196-200) என்பதும், குழந்தைக்குத் தாயின் முலைகள்போல் அடியவனுக்கு எம்பெருமானுடைய திருவடிகள் (பக் 215, 216) என்பதும், திருவாராதனத்தில் எம்பெருமானுக்கு அமுது செய்தருளப்பண்ணும்போது விண்ணப்பிக்க வேண்டிய பாசுரங்கள் இன்னின்னவை (பக் 193) என்பதும், மற்றும் பிறவும் கட்டாயமாகக் கண்டு தெரிந்துகொள்ளத் தக்கனவாம். தெவிட்டாத அமுதமயமான இந்நூலில் காணப்படுபவை எல்லாம் லாரதமங்களேயென்று உறுதியாகக் கூறலாம்.