உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் #73 கிறது (178) போன்ற முமுட்சுப்படி சூக்திகள் நினைக் கத்தக்கவை. "உனக்கே நாம் ஆட்செய்வோம்-மற்றைதம் காமங்கள் மாற்று' (திருப். 29) என்ற ஆண்டாள் கருத்தும், தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே என்ற திருவாய்மொழியின் (2.9:4)யின் கருத்தும் உண்மை யான கைங்கரியத்திற்கு எடுத்துக் காட்டுகளாகும். செய்ய வேண்டும்: கைங்கரியம் செய்வதைக் காட்டிலும், செய்ய வேண்டும்' என்ற பாரிப்பு நிலை நின்றிருந்தாலும் போதும் என்பது சாத்திரப் பொருள். தெழிகுரல் அருவி: கைங்கரியத்தில், ருசியுடையீர், அடிமை செய்ய வாருங் கள்!” எ ன் று அ ரு வி க ள் அழைக்கின்றனவாம்! "சிலைக்கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேள் குன்றம்’ (பெரி. திரு. 1.7:2) என்ற மங்கை மன்னன் கூற்றில் திருத்’ தலப் பயணிகட்கு வழிப்பறி செய்கின்ற வேடருடைய ஆர வாரமும் உத்தேச்யமாக இருக்கிற தென்றால் திருமலை அருவியின் ஒசையும் உத்தேச்யமாக இருப்பதைச் சொல்ல வேண்டுமா? திருவேங்கடத்து எழில் கொள் சோதி: அடிமை கொள்ளுகைக்குப் பாங்கான நிலம் இது என்று அவன் வந்து வசிக்கின்ற தேசம். பாங்கான நிலம் ஆயினவாறு என்? என்னில்: இச்சரீர சம்பந்தம் அற்று அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேடத்திலே போனால் இவன் செய்யக் கூடிய அடிமையை இந்நிலத்தில் இவன் செய்யக் கூடியவாறு அவன் (இறைவன்) வந்து வசிக்கின்ற தேசம் என்பது கருத்து. தொலைவில் உள்ளவனேயாகிலும் மேல் விழ வேண்டும்' என்று வடிவழகு இருத்தலின் எழில் கொள் சோதி என்கின்றார். வானார் சோதி (பரம பதநாதன்) யையும் நீலாழிச் சோதி (பாற்கடல் நாதன்)யையும் வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு வேங்கடத்து எழில் கொள் சோதி என்கின்றார்.