பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்வியகவி காட்டும் திருமலைக் காட்சிகள் 盛姆盘 வேறு சில காட்சிகள்: வேங்கடமலையின் உயர்ச் சியைக் காட்டும் போக்கில் வேறு சிலவற்றையும் வருணித் துக் காட்டுவர் திவ்விய கவி. வேங்கட மலையில் கண்டிக் கிடக்கும் உயர்ந்த சாதி மூங்கில்கள் முற்றி வெடித்தலால், அவற்றினின்றும் சிதறும் முத்துகள் மேகத்தைத் தொளை செய்து அம்மேகத்தினின்றும் வெளிப்படுகின்ற மழை நீர்க்கட்டிகளுடன் கீழே விழுகின்றன (33). அம்மலையின் மீது வானுற ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில் அவண் காணப் பெறும் இந்திர வில்லில் தொடுத்தற்கு அமைந்த அம்பு போல் காணப்பெறுகின்றது. செல்லுக்கு மேற்செல்லும் திண்ணியவேய் வாசவனார் வில்லுக்கு வாளியாம் வேங்கடமே (34) (செல்-மேகம், வேய்-மூங்கில்: வாசவனார் வில் இந்திர தனுக; வாளி அம்பு! என்பர் அய்யங்கார். அந்த மூங்கிலின் உச்சியில் கட்டப் பெற்ற தேன் இறால் உம்பருலகத்து நிலைக்கண்ணாடி போல் திகழ்கின்றது (36), உம்பருலகின் ஐவகைக் கற்ப கத்தருக்களில் கட்டப் பெற்ற செவ்விய தேன் இறால் மலை யின்மீது வரையாடு தாவிப் பாய்வதால் கிழிந்து தேனைச் சொட்டுகின்றது (40). இதனால் திருமலையின் உயர்ச்சி யும் ஆட்டின் கொழுமையும் தெளியப்படுகின்றன. பாக்கு மரங்களைப் பற்றிய வருணனை பாங்குற அமைந்து படிப் போரின் கவனத்தை ஈர்ப்பதை எடுத்துக் காட்டுவர் திவ் விய கவி. - பொன்கமழும் கற்பகத்தின் பூங்காவனத்துக்கு மென்கமுகம் காலாகும் வேங்கடமே (35) (பூ காவணம்-கற்பகச் சோலையாகிய பந்தல்; கமுகம்-பாக்கு; என்பது கவிஞரின் சொல்லோவியம் வ.தி.-14