உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்விய கவியின் கருத்தில் வேங்கடவாணன் 逻、 எம்பெருமானின் வியூகநிலை ஒரு பாடலில் காட்டப் பெறுகின்றது. வண்டுவரை நாட்டினான் மத்தாக வாரிதியுள் பண்டுவரை நாட்டினான்...(37) (வண்துவரை-வளப்பமுள்ள துவாரகை, வாசிதி. கடல்; பண்டு-முற்காலம் வரை-மலை! 3. தேவர்களின் பொருட்டு மந்தர மலையைத் திருப்பாற்கட லில் மத்தாக இட்டுக் கடைந்து அமிர்தம் கொணர்ந்த செயல் இந்த அடிகளில் காட்டப் பெறுகின்றது. அன்ன மாய் நின்று நான்முகனுக்கு அருமறைப் பொருளின் சாரத்தை விளக்கியருளினான் ( ). இச்செயல்கள் வியூக நிலையிலிருந்து கொண்டு நடத்தியவை. அன்னமாக நின்று அருமறை உணர்ச்திய செயல் ஆழ்வார் பெருமக்க ளாலும் உணர்த்தப் பெறுகின்றது (பெரி திரு. 11. 4:8ர். கண்ணனாகத் தேர்த்தட்டிலிருந்துகொண்டு காண்டிட: னுக்குத் தத்துவ நூலை வெளியிட்டது விபவத்தில்(44). எம்பெருமானின் விபவாவதாரச் செயல்கள் பல பாடல்களில் குறிப்பிடப்பெறுகின்றன. கண்ணனாக இருந்து வேய்ங்குழலூதி ஆதிரைகளைக் காத்த:ை (9), குடமாடியமை (A8) போன்ற செயல்களும்; இராமனாக வந்து அகலிகையின் சாபந்தீர்த்தமை (14), அதுமனை வாகனமாகக் கொண்டமை (33), சீதையுடன் பொருந் தியமை (38), அரக்கர்களை அழித்து வீடணனுக்குப் பட்டம் கட்டினமை (42) ஆகிய செயல்களும், வாமன உருவத்தில் வந்து மூவடி மண்ணை இரந்தமை (40), சுக்கிரனது கண்ணைக் கெடுத்தமை (43ர் போன்ற செயல் களும் இந்த நூலாசிரியர் காட்டுபவை; இவை அவருக்கு இறைய நுபவம் பெற ஊன்றுகோலாக துணை புரிபவை.