பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盏盏登 வடவேங்கடமும் திருவேங்கடமும் பவளம் போன்ற தனது திருவாய் மலரை 'ஆ' என்று திறந்தவலுமாகிய திருமால் சேர்ந்திருக்கும் இடம் திருமலையாகும். இங்ஙனமே கிருட்டினாவதாரத்தில் குழலூதி ஆதிரைகள் தன்னைச் சுற்றி வரச் செய்தல் (9), காளிங்கன்மீது நடனமாடி அதன் கொடுமையை அடக்கு தல் (70), பூதனையிடம் பாலமுது செய்து அவள் உயிரை யும் உண்ணல் (!!), வன்கஞ்சன் என்னும் சின மாமனைக் கொன்றமை (54), அதற்கு முன்பதாக மல்லர்களை வதைத்தமை, பாரதப் போரில் பஞ்சவர்க்காக நூற்று வரைக் காலன்பாலாக்குவித்தமை (19, 52), அதற்கு முன்னர் அப்போரில் திருவாழியால் பகலவனை மறைத்து இரவு தோன்றச் செய்தமை (34), பதினாயிரம் கோபியர் களை மணந்தமை (51), சத்தியபாமையின்பொருட்டு உம்பருலகினின்றும் பாரிசாத மரத்தை இம்பருலகிற்குக் கொணர்ந்தமை (28), தேர்த்தட்டினின்றும் பார்த்த லுக்குக் கீதையை உபதேசித்தமை (44), தன் பேரன் அதிருத்தன் பொருட்டு வாணனின் ஆயிரங் கைகளை அறுத்தமை 6ே) ஆகிய வீரச் செயல்கள் அதுசந்திக்கப் பெறுகின்றன. அடுத்து, இராமாவதாரச் செயல்களைப் பேசி இனிய ராகின்றார் அய்யங்கார். அந்த அவதார காலத்தில் நிகழ்த்திய கல்வடிவாக இருந்த அகலிகையை அழகிய அரிவையாக்கியமை (21), மாரீசனை இரண்டாவது முறை வெருட்டியமை (6.1), அவனைக் காலன் உலகிற்கு அனுப்பியமை (24), கலை வணங்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு துரடணன் தன் (முத்தலையார் உட்பட, உயிரை வாங்கியமை (49, 64), வரி நெடுவேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசு ஈந்தமை (42) அதற்கு முன்னர் சேது கட்டுவித்தமை ஆகிய அருஞ்செயல்களை அதுசந்தா னம் செய்து அகமகிழ்கின்றார் அய்யங்கார்.