பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器灌酸 வடவேங்கடமும் திருவேங்கடமும் இத்தனைப் பெருமையினையும் சீர்மையினையும் உடைய அரவக்கிரியோனுக்கு ஆட்பட்ட கவிஞர் பெருமான் தம் பெருமிதம் தோன்றப் பேசுகின்றார் தமது "மறந்தும் புறந்தொழா நிலையைக் குறிப்பிட்டு. அன்றுலகம் உண்டுமிழ்ந்த அகிலசெகற் காரணன் நீ; என்றுனக்கே யாளானோம்; இமிழருவி வடமலைவாழ் மன்தல்கமழ் துளவோய்உன் வயிற்றுள் எங்களோடுகடை நாட் சென்றுறைந்து மீளவரும் தேவரை டாம் மதியோமே (11) ! அன்று-பிரளய காலத்தில்; அகிலம்-உலகம்; செகத்காரணன்-உலக முழுவதற்கும் நீயே கார னன்; ஆள் ஆனோம்-அடிமையானோம்; கடை நாள்-யுகாந்த காலத்தில், சென்று-பிரவேசித்து, உறைந்து-வசித்து; மீளவரும்-பின்பு வெளியில் வருகின்ற; மதியோம்-ஒருபொருளாக இலட்சியம் செய்யோம்) தேவதாந்தரங்களைத் துதியாமல் பரதேவதையாகிய தினக்கே தொண்டு பூண்டு ஒழுகுகின்ற எங்களைக் காத் தருளல் வேண்டும்’ என்கின்றார். இந்தப் பாடல், உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம்பெருமான் உய்வித் தமையைக் கூறி உலகிற்கு உபதேசிக்கும் திருமங்கை யாழ்வாரின் திருமொழியையும் (11.5), நம்மாழ்வாரின், நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா பாவகை உலகமும் யாவரும் அகப்பட; நிலம்நீர் தீகால் சுடர் இரு விசும்பும் மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க