3? § வடவேங்கடமும் திருவேங்கடமும் ஸ்தேனத்திரம், ரீவேங்கடேச பிரமத்தி, ரீவேங்கடேசமங்களா சாஸனம் என்ற நான்கு வடமொழி நூல்கள். இவற்றை அடியொற்றித் தமிழில் மொழிபெயர்க்கப் பெற்றது திருவேங்கட:ைன் மாலை என்ற தொகுப்பு நூல். ஆகவே, இது வழி நூல் வகையைச் சார்கின்றது. இவற் துன் முதல்நூல் தமிழ் திருப்பள்ளி எழுச்சி மரபினைத் தழுவியதாகும். நம் நாடு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் வாழ்ந்த பாரதியாரும் பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி என்ற தலைப்பில் ஐந்து பாடல்களை இயற்றி உறங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்களிடம் தேசபக்திக் கனலை எழுப்பினார் என்பதை தாம் அறிவோம். இவர்களுள் தொண்டரடிப் பொடி யாழ்வாரும் மணிவாசகப் பெருமானும் பதிக முறையில் பத்துப் பாடல்களை அருளினர். பாரதியார் ஐந்து பாடல்களையே அமைத்தார். ஸ் ப்ரபாதம் ஆக்கியவர் இருபத்து மூன்று பாடல்களை இயற்றினார். ஸுப்ரபாத ஆசிரியர் ஒரு கவி மரபினையும் பின்பற்றாது பக்தி மரபினையே பற்றாசாகக் கொண்டு பாடல்களை அமைத்துக் கொண்டார். மேற்குறிப்பிட்ட நான்கு வடமொழி நூல்களை முறையே தழுவி அமைக்கப்பெற்றவை திருவேங்கட மாலையில் அடங்கியுள்ள திருவேங்கடவன் திருப்பள்ளி எழுச்சி, திருவேங்கடவன் துதி, திருவேங்கடவன் திருவடித் துதி, திருவேங்கடவன் மங்கள வாழ்த்து’ என்ற நான்கு நூல்களும். வடமொழியிலுள்ள நான்கு நூல்களையும் தமிழ்க் க வி ைத க ள க வடித்தெடுத்தவர் என் அரிய நண்பர் திரு இரா. பதுபநாபன் அவர்கள். இவர் நான் காரைக் குடியில் பணியாற்றிய காலத்திலும் (195060) அதற்குப்பின்னரும் காரைக்குடி அழகப்பர் பொறியி யற் கல்லூரி அலுவலகத்தில் முதல்வரின் தனி அலுவலரா கப் பணியாற்றி ஓய்வு பெற்றுப் பம்பாயில் தம் மகனுடன்
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/304
தோற்றம்