பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சங்ககால (வட) வேங்கடம் - (1)" வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்தை இனங்காட்டும் தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் இயற்றிய சிறப் புப் பாயிரப் பகுதி. ஈண்டுத் தென் குமரி என்பது குமரி யாறு கடல்கோள் கொண்டது என்பது நச்சினார்க்கினி யரின் விளக்கம். ஆனால் வடவேங்கடம்’ என்பது என்ன? இதைப்பற்றிச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இதற்குச் சங்க இலக்கியங்களில் வரும் வேங் கடத்தைப்பற்றிய குறிப்புகளை வைத்து ஆராயின் உண்மையொளி தட்டுப்படும். சங்க இலக்கியக் குறிப்புகள்: சங்க இலக்கியங் களில் பத்துப்பாட்டில் பட்டினப்பாலை, சிறுபாணாற்றுப் படை இவற்றில் உள்ள வேங்கடத்தைப்பற்றிய குறிப்பு களையும், எட்டுத்தொகையில் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை போன்ற நூல்களில் உள்ள வேங்கடத்தைப் பற்றிய குறிப்புகளையும் வைத்து ஆராய்ந்தால் சங்க இலக்கியங்களில் காணப்பெறும் வருணனைகள், இன்று நாம் வேங்கடத்தில் காணும் காட்சிகட்கு முற்றிலும் வேறுபட்டனவாக இருப்பதைக் காணலாம்.புறப்பொருள்

  • சப்தகிரியில்' (அக்டோபர்-1989) வெளி வந்தது.