பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வடவேங்கடமும் திருவேங்கடமும் வெண்பாமாலையிலும் சங்கமருவிய நூலாகிய சிலப்பதி காரத்திலும் வேங்கடத்தைப்பற்றிய பல குறிப்புகள் காணப்பெறுகின்றன. கண்ணனார் பாடியுள்ள அகப்பாடவில் வேங்கட நெடு வரை' என்ற தொடர் காணப்பெறுகின்றது. இச் சொற்றொடர் நீண்ட மலைத் தொடர்’ என்ற பொரு வில் வருகின்றது. தலைமகன் பிரிவினால் வேறு பட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்திக் கூறியதாக அமைந் தது இப்பாடல். இதில் வேங்கடத்தைப்பற்றி வரும் பகுதி சாரல் ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி கன்றுபசி களைஇய பைங்கண் யானை முற்றா மூங்கில் முளைதரு பூட்டும் வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை நன்னாட் பூத்த நாகிள வேங்கை நறுவி யாடிய பொறிவரி மஞ்ஞை நனைப்பசுங் குருந்தின் நாறுசினை யிருந்து துணைப்பயிர்ந் தகவும் துணைதரு தண்கார், வருதும் யாம் எனத் தேற்றிய பருவம் காண்;அது பாயின்றால் மழையே’’ -அகம் : 85 1உலந்த - கழிந்த பிடி - பெண்யானை, யானைகளிறு, தருபு - கொணர்ந்து: நாகு இள-மிக ளைய; வீ - பூக்கள்; மஞ்ஞை - மயில், நனைதனையுடைய நாறு சினை நறுமணம் வீசும் கிளை, பயிர்ந்து- அழைத்து, அகவும்-கூப்பிடும்; துணைதரு-விரைந்து வரும்; தண் - குளிர்ந்த; பாயின்று-வரா நின்றது.)