பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வட வேங்கடமும் திருவேங்கடமும் ரியர் அருஞ்சுரம்' என்று பொருள் கூறுவர். பிங்கலந்தை கடம்" என்பதனை ‘மலைச்சாரல்’ என்று கூறும். "புறவணி கொண்ட பூநாறு கடத்திடை' -நற்-48 என்ற நற்றிணை அடியில் கடம்" என்பது புதர்கள் அடர்த்த காடு என்ற பொருளில் வந்துள்ளது. வேம்' என்பது எரிதல் என்ற பொருளையுடையது. எனவே, வேங்கடம் என்பது கொதிக்கின்ற நீரற்ற சுரம் அல்லது மலைச்சாரல்’ என்று பொருள் பட்டுப் பாலை நிலத்தைக் குறிக்கின்றது. கலித்தொகையிலும், வெல்விடைச் செலன்மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை அன்னார் இருவரைக் காணிரோ? பெரும! காணோம் அல்லேம் கண்டனம் கடத்திடை: ஆண்எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய' -கலி-9 என்றபாடற்பகுதியிலுள்ள கடம்' என்றே சொல் 'பாலை நிலம்’ என்ற பொருளிலேயே வருகின்றது. இனி, தமிழ் கறு நல்லுலகத்திற்கு வடக்கேயுள்ள நிலப்பகுதியின் இயல் பினைக் கானோம். பேராசிரியர் அய்யங்கார் குறிப்பு: இந்த நிலப் பகுதியின் இயல்பினை இவ்வாறு தம் நூலில் குறிப்பிடுவர்: "கிழக்கு மலைத்தொடர்கள் தமிழகத்தின் வட எல்லையில் கடற்கரை ஓரமாகச் சென்று கிருஷ்ணை நதியைத்