பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வடவேங்கடமும் திருவேங்கடமும் என்ற சான்றோர் கூற்றினால் இஃது அறியப்பெறும். இதற்குத் தென் எல்லை பெண்ணையாறும், மேல் எல்லை வடார்க்காட்டையும் சேலமா நாட்டையும் பிரிக்கும் சவ்வாது மலைத் தொடருமாகும் என்பது கல்வெட்டு களால் அறியக் கூடிய குறிப்பாகும். "வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை' -அகம்-85 "செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன் பல்பூங் கானல் பவத்திரி' -அகம்-340 என்ற குறிப்புகளால் இவன் வேங்கட நாடாண்ட விழுச் சிறப்புடையான் என்பதும், பூஞ்சோலை பல சூழ்ந்த பவத்திரி என்னும் ஊர் உடையான் என்பதும் இவனைப் பற்றி அறியத் தக்க செய்திகளாகும். பவத்திரி என்னும் ஊர் கிழக்குக் கடற்கரையில் தற்காலக் கூடுருக்கு அருகில் உள்ளது. இத்திரையன் தமிழ் மூவேந்தருள்ளும் அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்' உடைமையாற் சிறந்தவன் என்றும், குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண், பகல் செய் மண்டிலம் பாரித் தாங்கு, முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும், வேண்டுப வேண்டுப வேண்டி னர்க்கருளி மேம்பட்டவன் என்றும், புலவர் பூண்கட னாற்றிப் பகைவர், கடிமதிலெறிந்து குடுமி கொள்ளும், வென்றியல்லது வினையுடம்படினும், ஒன்றல் செல்லா' உரவோன் என்றும், அவன் நாட்டில் ஆறலைக்கள் வரும் பிற தீங்கு புரிவோரும் இலர் என்றும் பெரும்பாணாற்றுப் படை பெரிதாகப் பேசுகின்றது. மேலும் அப்பாடலால் அறியக் கூடிய செய்திகள் இவை: திருமாலை முதல்வ னாகக் கொண்ட குடியிற் பிறந்தவன்; திரைதருமரபின்