பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வட) வேங்கடத்தை ஆண்ட அரசர்கள் 37 தொண்டைமான் இளந்திரையன் என வழங்கப்படுவான். கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பாராட்டப் பெற்ற வன். இளந்திரையனார் என்று சங்கப்பாடல்களால் அறியத் தக்கவனும் இவ்வரசனே. இவன் கவியரங்கேறிய காவலன். இவன் பாடியனவாக நற்றிணையில் மூன்று பாடல்களும் (94, 99, 106) புறநானூற்றில் ஒருபாடலும் (185) காணப்பெறுகின்றன. இருநிலங் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த் திரைதரு மரபின் உரவோன் உம்பல் -பெரும்பாண் 29-31, என்ற பெரும்பாணாற்றுப் படையின் அடிகளினால், இவன் முன்னோன் திரைகடல் வழியாகப் போந்து தொண்டை நாட்டுக்கு வேந்தனாயினான் என்றும், அவன் வழித்தோன்றல் இவன் என்றும் அறியலாம். வென்வேற்கிள்ளி என்ற சோழனுக்கும் நாக நாட்டு வேந்தன் மகள் பீலிவளை என்பாளுக்கும் பிறந்து, கடலில் கலமூர்ந்து வருங்கால் அது சிதைந்து போக இவன் திரை யில் மிதந்து கரை அடைந்தான் என மணிமேகலையால் (24-ஆம் காதை) அறிய முடிகின்றது. பின்பு அவன் அக்காரணத்தால் திரையன் எனப்பட்டான். வேந்தன் மகன் என்றற்கு அடையாளமாகத் தொண்டைக் கொடி அணிந்திருந்ததுபற்றி அவன் .ெ தா ன் ைட ம | ன் ஆயினான். இவன் ஆண்ட தொண்டை நாட்டுக்கு வடக்கெல்லை வேங்கடமாகும். 'வினை நவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஒங்குவெள் ளருவி வேங்கடம்' -அகம்-213