பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器窑 வடவேங்கடமும் திருவேங்கடமும் (பயம்-நீர்; பெயர்த்து-அற்று: மாதிரம்-திசைகள்: வெம்ப்-கொதிக்க: வம்ப்லர்-புதியர் (வழிப் போக்கர்); கோவலர்-இடையர் மழவிடை. இளைய எருது திம்புள்-இனிய புளிச்சோறு: :ேஇடை (ப்சியால்) காதடைப்பு பகுக்கும் அளிக்கும்). பொருள் வயிற்பிரிந்து செல்லும் புதியர் கோடையின் வெம்மையால் நீர் நிலைகள் எல்லாம் வற்றிப்போன நிலையில், தம் நாட்டின் வழியாகச் செல்லுங்கால் எருது களின் கழுத்தில் கட்டி வைத்த புளிச்சோற்றைத் தேக் கிலையில் வைத்துத் தருவர் என்று ஆயர்களின் விருந்தோம் பும் பண்பினை எடுத்துக் கூறுவர். இங்கனம் வீரரும் ஆயரும் கலந்து வாழும் வேங்கட நன்னாடாண்ட இரவலர்க்கு இல்லை என்னாது ஈயும் வண்மையும், அதனால் வளமார்ந்த புகழும் உடைய வனாய்த் திகழ்ந்தான். அத்தகையவன் அவன் என்று அறிந்த புலவர் பெருமக்கள் அவனைப் பெருகப் பாராட் டினர். பொய்யா நல்லிசை மாவன் புல்லி' -அகம்-359 என்றும், 'நெடுமொழிப் புல்லி' -அகம்-393 என்றும் மாமூலனார் சுருங்கிய வாய்பாட்டால் பாடிப் போற்றுவதைக் கண்டு மகிழலாம். திரையன் : இவன் தமிழகத்துப் பேரரசர் மூவரோ டும் ஒருங்கு வைத்து மதிக்கத்தக்க மாண்புடையவன். ஆயி னும், இவன் குறுநில மன்னன் என்றே வழங்கப்பெறுவான் (தொல். பொருள் மரபு-83 பேராசிரியர் உரை காண்க) பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்;