பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வடவேங்கடமும் திருவேங்கடமும் யைத் தொல்காப்பியர் கூறும் வடவேங்கடம்" என்று அறுதியிட்டு உரைப்பது தவறு என்பதும் தெளிவாக்கப் பெற்றது. சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் வடவேங்க டம் இன்னதுதான் என்று இனமும் காட்டப்பெற்றது. திருப்பதியின் இருப்பும் சூழலும் முதலில் இருப்தி' என்ற நகரத்தின் இருப்பையும் அதன் இயற்கைச் சூழ் நிலையையும் தான்போம். கோவிந்தராசர் இங்குத் திருக்கோயில் கொண்டிருப்பதால், இந்நகரத்தைப் பக்தர் தன் கோவிந்தராசப் பட்டணம் என்றே வழங்குகின் றனர். இந்த நகரத்தை ஒட்டியுள்ள மலையையும் மக்கள் திருப்பதி என்றே வழங்குகின்றனர். விவரம் அறிந்தோர் இன்ைத் திருமலை என்று கூறு ஆர். (மலையைத் திரு மலை என்றும் நகரைத் 'திருப்பதி என்றும் வழங்குவதே சரியாகும்). இந்த மலை தமிழ் கூறு நல்லுலகத்தின் வட இழக்கு மூலையிலுள்ள ஒழுங்கற்ற தது" சில குன்று களின் கூட்டமாகும். இம்மலை 14 டிகிரி வட குறுக்கையுள் g5% (North |stitude) 80 டிகிரி கீழ் நெடுக்குக் கோட்டி லும் (Longitude) அடங்கி சென்னைக்கு வடமேற்குத் திசையில் சுமார் 85 கல் தொலைவில் அமைந்துள்ளது. இம்மலை ஏழுமலை' என்றே வழிவழியாக வழங்கப் பெற்று வருகின்றது. பேருந்தில் மலைக்குச் சென்று திரும்பும் சாலையில் முதலில் நாம் காண்பது-கீழிருந்து இல்-விருஷபாத்திரி (எருத்து மலை). அடுத்து முறையே இத்தி,நீலமலை,அஞ்சனத்திரி'(மைவதை)சேஷாத்திரி (சேடமல்ை, சேடம்-பாம்பு), கருடாத்திரி (கருடமலை) நாராயணாத்திரி (நாராயணமலை),வேங்கடாத்திரி (வேங் கடமலை) என்ற பெயர்ப் பலகைகளைக் கண்டு ஏழுமலை யையும் இனங்கண்டு கொள்கிறோம். அத்திரி என்ற வட மொழிச் சொல் மலையைக் குறிப்பது. இந்த மலைக்குன்று கள் நேராக ஒர் ஒழுங்கில் அமையவும் இல்லை; ஒன்றையொன்று தொடர்ந்த நிலையில் ஒரு சங்கிலி போல